Home / Photos
முகப்பரு எதனால் ஏற்படுகிறது.. முகப்பரு ஏற்படுவதை தடுப்பது எப்படி..?
காலம் காலமாக இளசுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருவது இந்த முகப்பருக்கள் தான். முதப்பருக்கள் முக அழகை மொத்தமாக கெடுத்துவிடும். முகப்பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
1/8
Share
இளம் வயதினரிடையே முகப்பருக்கள் என்பது பொதுவான சருமநிலை தான். இந்த முகப்பருக்கள் முகத்தின் மொத்த அழகை கெடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது. அவ்வாறு ஏற்படக்கூடிய முகப்பருவுக்கு முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தான் முக்கிய காரணம் ஆகும்.
2/8
Share
இந்த எண்ணெய் சுரப்பிகள் முகத்தில் உள்ள இறந்த செல்களுடன் சேர்ந்து சருமத்தில் இருக்கும் சிறு துவாரங்களை அடைத்து விடுகின்றன. இந்த செயலினால் பாக்டீரியாக்கள் உருவாகி முகப்பருக்கள் தோன்றுகின்றன.
3/8
Share
இளமை பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் செபாக் சுரப்பியிலிருந்து முகத்திற்கு எண்ணெய் சுரப்பை அதிகரிக்கும். அதேபோல் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின்போது மற்றும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்களின்போதும் முகப்பருக்கள் தோன்றும்.
4/8
Share
மேலும், தோல் சுழற்சி, மன அழுத்தம், முக பராமரிப்புக்காக பயன்படுத்தக்கூடிய சில வகை மருந்துகள் அல்லது இரசாயன சேர்மங்கள் போன்றவற்றாலும் முகத்தில் பருக்கள் ஏற்படக்கூடும். அழுக்கு நிறைந்த பாய்கள் மற்றும் தலையானைகள் கூட பருக்கள் வருவதற்கு காரணமாக இருக்கலாம்.
5/8
Share
பருக்களை உடைப்பதால் முகத்தில் பருக்கள் அதிகமாக வாய்ப்புள்ளதால், முடிந்தளவுக்கு முகப்பருக்களில் கைகள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் சென்று வந்ததும் முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 2 முறையாவது முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
6/8
Share
சுத்தமான பருத்தி துண்டால் முகத்தை துடைக்க வேண்டும். அதேபோல், முகத்தை துடைப்பதற்கென்று தனியாக துண்டு வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் சார்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முகப்பரு ஏற்பட்டால் தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
7/8
Share
நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். அதேபோல், சாக்லேட், சீஸ், பன்னீர் மற்றும் இதர பால் பொருட்களின் உட்கொள்ளலை குறைக்க வேண்டும்.
8/8
Share
ஹெல்மெட் மற்றும் சட்டையின் காலரை இறுக்கமாக அணிய வேண்டாம். முகப்பருக்களுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகத்தில் வடுக்களோ குழிகளோ ஏற்படுவதை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications