Home / Photos
தமிழ் சினிமாவில் ஆளையே காணோம்.. என்ன ஆனார் இறுதிச்சுற்று பட நடிகை?
By Chandru
நடிகை ரித்திகா சிங்கிற்கு என்ன ஆச்சு? தமிழ் சினிமா பக்கம் ஆளையே காணோமே? வாங்க பார்ப்போம்.
1/8
Photo Credit: instagram@ritika singh
Share
மாதவன் நடிப்பில் வெளிவந்த 'இறுதிச்சுற்று' படத்தில் நாயகியாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரித்திகா சிங். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து ரித்திகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
2/8
Photo Credit: instagram@ritika singh
Share
ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்து வந்தார். குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
3/8
Photo Credit: instagram@ritika singh
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த படம் வேட்டையன், அதன் பின்னர் தமிழில் ஆளையே காணோம். நல்ல ஃபேன்ஸ் கூட்டம் இருந்தும் இவருக்கான மார்க்கெட் இல்லை. ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் தற்போது எந்த மொழியிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.
4/8
Photo Credit: instagram@ritika singh
Share
தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தார், அதனை பார்க்கும்போது தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியான கதைக்காக வெயிட் செய்த நேரத்தில் புதுமுக இளம் நடிகைகள் அந்த இடத்தை நிரப்பிவிட்டனர்.
5/8
Photo Credit: instagram@ritika singh
Share
ரஜினியின் வேட்டையன் படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் தமிழ் உட்பட வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு இல்லை. பெரிய ஃபேன்ஸ் கூட்டம் இருந்தும் இவருக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
6/8
Photo Credit: instagram@ritika singh
Share
பட வாய்ப்பு இல்லைனா என்ன? இன்ஸ்டா இருக்கே என்பது போல் அதில் விதவிதமான கலக்கலான போட்டோக்களை பகிர்த்து தனது ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்தும் தக்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@ritika singh
Share
கலக்கலான போட்டோக்கள் மட்டுமல்லாமல் வொர்கவுட் வீடியோக்களை பகிர்த்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். படம் இல்லாத நேரத்தில் உடலை மிகவும் ஃபிட்டாக வைக்க தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். ஆக்ஷன் கதை படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் இவருக்கு சரியான சான்ஸ் தான் கிடைக்காமல் உள்ளது.
8/8
Photo Credit: instagram@ritika singh
Share
மீண்டும் ரித்திகாவை திரையில் எப்போது பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். திரையில் பார்க்கமுடியாத ரித்திகாவை ரசிகர்கள் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்படும் கலக்கல் போட்டோக்களை பார்த்து ஆறுதலடைந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications