குபேரா படத்தில் நடிக்க.. தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? கணிப்பு!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குபேரா' படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஜூன் 1ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதில், தனுஷ் தனது காரசாரமாக பேச்சின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். குபேரா படத்தில் நடிக்க தனுஷ் எவ்வளவு சம்பளம் வங்கியிருப்பார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தனுஷ்: 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த தனுஷ் தற்போது தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட் சினிமாவையும் கலக்கினார். ஏகப்பட்டா ஹிட் படங்களை கொடுத்து தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'ராயன்', இது அவரின் 50வது படமாகும். அதனை தொடர்ந்து 51வது படமாக குபேரா ரிலீஸாகவுள்ளது.
குபேரா: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய காதபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'குபேரா'. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பாரசாத் இசையாமாய்கிறார். இப்படம் வரும் ஜூன் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையலாம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.
அடுத்த காலா? மும்பை தாராவியை மையப்படுத்தி ரஜினி நடிப்பில் வெளியான 'காலா' அமோக வரவேற்பை பெற்றது. ரஜினியை தொடர்ந்து தற்போது தனுஷ் அதே ஸ்டைலை கையாண்டுள்ளார். மும்பை தாராவி மையப்படுத்தி அரசியல், திரில்லர், ஆக்ஷன் கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். விஜய்யின் வாரிசு படத்திற்கு பின் மீண்டும் தமிழில் களமிறங்கியுள்ளார்.
தனுஷ் சம்பளம்? தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ராயன். அப்படத்தை தனுஷ் தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட்டாகின. அப்படத்தில் தனுஷ் 50 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருந்தார். அவரே தயாரித்து நடித்ததால் 50 கோடி ரூபாய் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது தனுஷின் 51வது படமாக 'குபேரா' பான் இந்தியா படமாக ரிலீஸ்கவுள்ளது. பல மொழிகளில் ரிலீசாகவுள்ள அப்படத்தில் நடிக்க தனுஷ், 90 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் பேச்சு அனல்பறந்த நிலையில் படமும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications