Home / Photos
PHOTOS : ஆப்பிள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் 'i' என்பதன் அர்த்தம் என்ன? சுவாரசிய தகவல் இதோ..
By Chandru
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'ஆப்பிள்' நிறுவனம் ஐ-போன்களுக்கு மிகவும் பிரபலமானது. ஆனால் இந்த ஐ-போன் என்ற பெயரில் 'ஐ' என்ற எழுத்து எதனை உணர்த்துகிறது என உங்களுக்கு தெரியுமா? பலருக்கும் இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நெனைக்கிறேன்.
1/9
Share
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'ஆப்பிள்' நிறுவனம் ஐ-போன்களுக்கு மிகவும் பிரபலமானது. ஆனால் இந்த ஐ-போன் என்ற பெயரில் 'ஐ' என்ற எழுத்து எதனை உணர்த்துகிறது என உங்களுக்கு தெரியுமா? பலருக்கும் இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நெனைக்கிறேன்.
2/9
Share
ஆம், இன்று அனைவர்க்கும் பிடித்த ஐ- போனில் வரும் 'ஐ' என்ற ஒற்றை எழுத்தை பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம். ஆப்பிளை வைத்து நியூட்டன் பூமியில் புவியீர்ப்பு உள்ளது என்பதை கண்டுபிடித்தார். அதேபோல் ஆப்பிள் என்ற நிறுவனம் ஸ்டீவ் ஜாப்சால் உருவாக்கப்பட்டு தற்போது டெக் உலகை ஆட்சிசெய்து வருகிறது. "ஆப்பிள் என்ற பெயரில் இதே இருக்கிறது போல தான் தெரிகிறது".
3/9
Share
1976 ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் தற்போது உலகளவில் பல கிளைகளை கொண்டு ஆலமரமாக படர்ந்து நின்றுள்ளது. வருடத்திற்க்கு பல கோடுகளை வருவாய் ஈட்டி வரும் இந்த ஆப்பிள் நிறுவனம் டெக் உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தையே அமைத்துக்கொண்டது.
4/9
Share
அன்ராயிட் செல்போன் வைத்திருப்பவர்கள் சாமானியர்கள் என்றும் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்றும் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கிறது.
5/9
Share
ஆப்பிள் நிறுவனத்தில் பல டெக் பொருட்கள் இருந்தாலும் ஐ-போனுக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஐ-போனை வைத்துருந்தால் ஒரு தனி கெத்துதான் என அனைவரும் நினைக்கும் அளவிற்கு ஐ-போனின் தாக்கம் மக்கள் மத்தியில் நிரம்பியுள்ளது.
6/9
Share
ஆப்பிள் நிறுவனம் ஐ-போன், ஐ-பாட், ஐ-மேக் போன்ற பல தொழில்நுட்பங்களை தயாரித்து வருகிறது. ஆனால் இந்த தொழில் நுட்பங்களின் பெயர் அனைத்திலும் 'ஐ' எழுத்து முன்னிலை வகுக்கிறது. ஏன் இந்த 'ஐ' எழுத்து அனைத்திலும் முன்னிலை வகுக்கிறது என பார்ப்போம் :
7/9
Share
ஆப்பிளின் பல தொழில்நுட்ப தயாரிப்புகளில் உள்ள "i" என்பது "இணையத்தை" (internet) குறிக்கிறது. ஐபாட், ஐமாக் மற்றும் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்டர்நெட்டை அடிப்படையாக கொண்டு தான் செயல்படுகிறது.
8/9
Share
1998 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஐமாக்' என்ற கணினியை அறிமுகப்படுத்தினார். இதில், பில்ட் இன் இன்டர்நெட் (built-in internet) என்ற தொழில்நுட்பத்தை இந்த கணினி மூலம் முதல் முறையாக ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார்.
9/9
Share
இந்த ஐமாக் கணினி மூலம் 'ஐ' என்ற எழுத்து ஆப்பிள் தயாரிக்கும் அனைத்து தொழில்நுட்பத்திலும் அன்று முதல் என்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே ஆப்பிள் நிறுவனம் 'ஐ' எழுத்தை பயன்படுத்துவதற்கான காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications