Home / Photos
வங்கி செக் லீஃப்-ல் இடம் பெற்றிருக்கும் MICR குறியீட்டின் அர்த்தம் என்ன தெரியுமா..?
வங்கி காசோலை (Cheque)-இல் இடம் பெற்றிருக்கும் எம்ஐசிஆர் குறியீடு பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
1/6
Share
MICR (Magnetic Ink Character Recognition) என்பது மின்னணு கிளியரிங் சிஸ்டத்தில் (ECS) பங்கு பெறக்கூடிய ஒரு வங்கி அல்லது வங்கி கிளைகளை துல்லியமாக கண்டறிய பயன்படுகின்ற 9 இலக்க குறியீடாகும். இது காசோலைகளின் செயலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.
2/6
Share
ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு தனித்துவமான MICR குறியீட்டை ஒதுக்குகிறது. NEFT, IMPS மற்றும் RTGS மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு IFSC குறியீடு போன்று MICR குறியீடும் அவசியம்.
3/6
Share
இந்தியாவிலுள்ள ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு ஆன்லைன் அல்லது மின்னணு பணப் பரிமாற்றத்திற்கு IFSC குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், உலகளாவிய நிதி பரிமாற்றங்களுக்கு MICR குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
4/6
Share
MICR குறியீட்டில் கொடுக்கப்பட்டுள்ள முதல் 3 இலக்கங்கள் நகர்ப்புற குறியீட்டை குறிக்கின்றன. நடுவில் இருக்கும் 3 இலக்கங்கள் வங்கி குறியீட்டை குறிக்கின்றன. கடைசி 3 இலக்க எண்கள் வங்கி கிளை குறியீட்டை குறிக்கின்றன.
5/6
Share
எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) கிரெடிட் திட்டத்தின் கீழ், முதலீட்டு போர்ட்ஃபோலியோக்கள், லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் SIP போன்ற நிதிக் கருவிகளில் விண்ணப்ப ஆவணங்களை தாக்கல் செய்யும் போதும் இந்த MICR குறியீடு தேவைப்படும்.
6/6
Share
இந்த MICR குறியீடு காசோலையின் கீழே, காசோலை எண்ணிற்கு அடுத்ததாக குறிக்கப்பட்டிருக்கும். அதேபோல் இது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்திலும் அச்சிடப்பட்டிருக்கும். MICR குறியீடுகள் காந்த மையை (Magnetic Inc) பயன்படுத்தி அச்சிடப்படுவதால், நகலெடுப்பது தடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications