முதல்வர் விஜய் பிறந்தநாளுக்காக திரிஷா கொடுத்த விதவிதமான கேக்.. அப்படி அதில் என்ன ஸ்பெஷல்? ருசிக்க தேடும் ஃபேன்ஸ்!
முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை அவருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் நடிகை திரிஷா. ஒருபக்கம் இவர்களின் போட்டோ சோசியல் மீடியாக்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் விதவிதமான கேக்குகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த கேக் பெயர் என்ன? விலை என்ன? வாங்க பார்ப்போம்.
முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை நடிகை திரிஷா வெகுவிமர்சையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விஜய் பிறந்தநாளன்று எந்த ஒரு பதிவும் போடாத திரிஷா, நேற்று திடீரென விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை போஸ்ட் செய்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். விஜய்-சங்கீதா விவாகரத்துக்கு காரணமே த்ரிஷா தான் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இவரின் செயல் ஒவ்வொன்றும் ஏற்கப்பட்ட கிசுகிசுக்களை உருவாக்கி வருகிறது. இது ஒருபக்கம் இருந்தலும் மற்றொரு பக்கம் திரிஷா விஜய்க்காக கொடுத்த கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ஸ்பெஷல் கேக் என்ன? விலை என்ன? எங்க கிடைக்கும்? என நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். வந்த கேக் பற்றி நாம் பார்ப்போம்.
விஜய்க்கு மிக அருகில் இருக்கும் பெரிய கேக்கின் பெயர் 'Pink Floral Layer Cake'. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிங்க் மற்றும் வெள்ளை பட்டர் கிரீம் கொண்டு கேக் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் எடை சுமார் 1.5-2 கிலோ வரை இருக்கும். விலை சுமார் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேக்கை Theobroma, CakeZone, FNP (Ferns N Petals), Winni, IGP Cakes ஆகிய கேக் கடைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
திரிஷாவுக்கு மிக அருவில் இருக்கும் கேக்கின் பெயர் Fruit-Topped Cream Cake. கேக்கின் மேற்புறம் மாம்பழங்களால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சுற்றிலும் க்ரீம் மூலம் அலங்கரிக்கப்பட்ட அந்த கேக்கின் எடை சுமார் 1 கிலோ இருக்கும். அதன் விலை சுமார் ரூ.1500 வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ப்ரூட் கேக்கும் Theobroma, CakeZone, FNP (Ferns N Petals), Winni, IGP Cakes ஆகிய கேக் கடைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இரண்டு பெரிய கேக்குகளின் முன் இருக்கும் மூன்று சிறிய கேக்குகளின் பெயர் Tiramisu Dessert Cups. இது மூன்று லேயர்களால் செய்யப்பட்ட ருசியான கேக்காகும். ஒவ்வொன்றின் விலை 350 ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேக்கை ஸ்விகி, ஜொமேட்டோ போன்ற ஆன்லைன் தளத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications