சன்னி லியோன் நடித்த திரில்லர் திரைப்படம்.. என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு அல்லது இரவில் பார்க்கவேண்டிய சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் மிக பெரிய ஃபேன்ஸ் கூட்டத்தை கொண்டவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஓடிடி பிரியர்களின் கவனம் ஈர்த்துள்ளது. என்ன படம்? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை பார்ப்போம்.
பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் 'Kennedy'. அதிரடி ஆக்ஷன், க்ரைம், திரில்லர் ஜானரில் வெளிவந்து சினிமா ரசாகர்களை ஈர்த்து வருகிறது.
கதை என்ன? முன்னாள் போலீஸ் அதிகாரியான ராகுல் பட், இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வேறு அடையாளத்துடன் மும்பை நகரில் டாக்சி ஓட்டும் வேலை செய்து வருகிறார். அந்த கதாபாத்திரம் பெயர் தான் 'Kennedy'.
ராகுல் பட், Kennedy என்ற அடையாளத்துடன் டாக்சி வேலை செய்ய காரணம் ஒரு போலீஸ் உயரதிகாரி. தனது சொந்த தேவைக்காக ராகுல் பட்டை பயன்படுத்தி வருகிறார். மும்பை நகரில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள், போலீசுக்கு பிரச்னை தரும் ரவுடிகள் என அந்த போலீஸ் அதிகாரி கை காட்டும் ரவுடிகளை போட்டுத்தள்ளும் நபராக ராகுல் பட் உள்ளார்.
ஒருபக்கம் போலீசுக்கு வேலை செய்யும் ராகுல் பட், மற்றொரு பக்கம் பழிக்குப்பழி வாங்கும் கொடூரமான நபராகவும் உள்ளார். என்? எதற்காக? என்பதே படத்தின் மீது சுவாரசிய த்ரில் கதைக்களம்.
எந்த ஓடிடி? கடந்த வாரம் ஓடிடியில் ரிலீஸான இப்படம், ஓடிடி பிரியர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சன்னி லியோனியை காணவே தனி கூட்டம் இப்படத்தை வியூ செய்து வருகின்றனர். இந்த சூப்பர் ஹிட் க்ரைம், திரில்லர் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications