வசூல் வேட்டையில் 'வித் லவ்'.. படத்தின் பட்ஜெட், கலெக்ஷன் என்ன?
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த ஃபீல் குட் திரைப்படம் 'வித் லவ்'. இப்படம் 3 நாளில் செம வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. வாங்க படத்தின் பட்ஜெட், கலெக்ஷன் எவ்வளவுன்னு பார்ப்போம்.
வித் லவ் ஹீரோ: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த அப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் மெகா ஹிட்டானது. "யாருடா அந்த பையன்" என்பது போல் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார் அபிஷன். ஸ்டார் பிரபலங்கள் பலரும் அபிஷனை பாராட்டினர். முதல் படம் செம வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்த படத்தை எப்போது இயக்கப்போகிறார் என்று சினிமா ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்க திடீரென ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
படக்குழு: அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
ரிலீஸுக்கு முன் செம ஹைப்: படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை பார்த்துவிட்டு சூப்பர், ஆஹா ஓஹோ என வர்ணித்தார். இதனால் படத்தின் மீதான ஹைப் பல மடங்கு உயர்ந்தது. அதன்படி தியேட்டரில் ரிலீசான 'வித் லவ்' படத்தை சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். முதல் நாளில் இருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கத் தொடங்கியது.
கதை சுருக்கம்: பெண் பார்க்க செல்லும் அபிஷன், தனது பள்ளி பருவ தோழியான அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார். இருவருக்கும் செம ஷாக். பின்னர் இருவரும் தங்களின் எக்ஸ் காதல் கதையை பரிமாறிக்கொள்கின்றனர். மெல்ல மெல்ல அந்த பேச்சு பள்ளி பருவத்துக்கு கொண்டு செல்கிறது. பின்னர் என்ன ஆனது என்பதே இந்த படத்தின் சுவாரசியம் நிறைந்த ஃபீல் குட் கதைக்களம்.
பள்ளி பருவம்: விஜய் சேதுபதியின் '96' திரைப்படம் எப்படி பள்ளி பருவ நினைவுகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்ததோ அதேபோல் இப்படமும் பார்வையாளர்களின் பள்ளி பருவத்தை கண்முன் காட்டியதாக விமர்சனம் செய்யப்பட்டது. ஃபேமிலி ஆடியன்ஸ் முதல் இளசுகள் வரை அனைவராலும் வித் லவ் திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பட்ஜெட்? வசூல்? டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை போல் இப்படமும் குறைத்த பட்ஜெட்டில் உருவாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 8-10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான வித் லவ் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாகி வெறும் 3 நாட்களில் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அறிமுக ஹீரோ, அறிமுக இயக்குநர் படமாக இருந்தும் படம் செம வரவேற்பு கிடைக்க காரணம் கதையே. நல்ல கதையை மக்கள் என்று கொண்டாட தவறுவதில்லை.


Click it and Unblock the Notifications