எலான் மஸ்க் முதல் முகேஷ் அம்பானி வரை.. உலக கோடீஸ்வரர்களின் ராசி என்ன தெரியுமா? சுவாரசிய பட்டியல்!
கோடிகளில் புரளும் உலக பணக்காரர்களின் ராசி என்னவா இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். அப்படியாக உலக கோடீஸ்வரர்களின் ராசி என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியும், கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனருமான லெரி பேஜ் இருவரும் மேஷம் ராசியை சேர்ந்தவர்கள்.
மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ரிஷபம் ராசியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உலக பிரபலமான அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் இருவரும் மிதுனம் ராசியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் எலான் மஸ்க், கடகம் ராசியை சேர்ந்தவர். 800 பில்லியன் டாலருடன் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்து வருகிறார்.
உலக பிரபலமான மாடல் அழகி, கைலி ஜென்னர், சிம்மம் ராசியை சேர்ந்தவர். வெறும் 20வது வயதில் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
அமெரிக்காவை சேர்ந்த பங்குசந்தை ஜாம்பவான் வாரன் பஃபெட் மற்றும் சீனாவை சேர்ந்த ஜாக் மா இருவரும் கன்னி ராசியை சேர்ந்தவர்கள்.
உலக பிரபலமான வால்மார்ட் நிறுவனத்தின் நிறுவனருடைய மகள் ஆலிஸ் வால்டன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் துலாம் ராசியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், விருச்சகம் ராசியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு சுமார் 135 பில்லியன் டாலராகும்.
உலக பிரபலமான பாப் பாடகர் ஜே ஜீ, தனுசு ராசியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications