2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகள்.. யாரெல்லாம்? போட்டோஸ் பாருங்க!
ஒரு சில வாரங்களில் 2025 முடிவுக்கு வரவுள்ளது. 2025ம் ஆண்டின் சில நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி, சக போட்டியாளரான அமீரை காதல் திருமணம் செய்துகொண்டார். பாவனிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடோடிகள் பட நடிகை அபிநயா, தன்னை போல் மாற்றுத்திறனாளியான வேகேசன கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடிகை பார்வதி நாயர், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி நவ்நீத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் தனது 34வது வயதில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் 1ம் தேதி ஈஷா யோக மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார்.
பிக் பாஸ் பிரபலம் ஜூலி, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இம்மாதம் இறுதிக்குள் அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications