Year Ender 2025: இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள் என்னென்ன? பலி எண்ணிக்கை எவ்வளவு? ஒரு பார்வை!
2025ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள் என்னென்ன? அதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜனவரி 2025: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்ததால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சலசலப்பில் 6 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த ஆண்டின் முதல் கூட்ட நெரிசல் சம்பவமாகும்.
ஜனவரி 2025: அதே ஜனவரி மாதம் 29ம் தேதி உத்திரபிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்றது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகமெங்கும் உள்ள மக்கள் பிரக்யராஜ் நகருக்கு படையெடுத்தனர். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடவேண்டி கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பிப்ரவரி: உத்திரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த பயங்கர கூட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்தனர்.
மே: கோவாவில் உள்ள ஸ்ரீலைராய் தேவி கோவிலில் வருடாந்தர திருவிழா நடைபெருவது வழக்கம். அந்த வகையில் கடந்த மே மாதம் வருடாந்தர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுலாவாசிகளும் கலந்துகொண்டனர். திருவிழாவில் ஒரேநேரத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டதால் மே மாதம் 3ம் தேதி அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.
ஜூன்: பல வருடங்களுக்கு பின்னர் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த சந்தோசத்தை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை: உத்தரகாண்டு மாநிலம் ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோவிலில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 6 பேர் உயிரிழந்தனர்.
செப்டம்பர்: கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நவம்பர்: ஆந்திரப்பிரதேசம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.


Click it and Unblock the Notifications