Year Ender 2025: உலகளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த நகரங்கள்.. நம்பர் ஒன் நகரம் எது? டாப் 10 பட்டியல்!
2025ம் ஆண்டில் உலகளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த டாப் 10 நகரங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த நகரங்களின் பட்டியலில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் 10ம் இடத்தில் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 17.3 மில்லியன் சுற்றுலா பயணிகளை கோலாலம்பூர் ஈர்த்துள்ளது. இரட்டை கோபுரம், ஷாப்பிங் மால்கள், வித்தியாசமான உணவுகள் என பல சிறப்பம்சங்கள் கொண்ட நகரமாக உள்ளது.
உலகளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த நகரங்களின் பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரம் உள்ளது. உலக புகழ்பெற்ற ஈஃபெல் கோபுரத்தை காணவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் இது காதலர்களின் நகரம் என்பதால் புதுமண தம்பதிகளுக்கு ஏற்ற ஹனிமூன் இஸ்பாட்டாகவும் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 18.3 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
துருக்கியில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரம் ஆண்டலியா. இந்த பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 18.6 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. பழமையான கட்டிடங்கள், ரம்மியமான கடற்கரையில் நிறைந்த நகரமாக உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரம் 'மக்கா'. இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் தங்களின் புனித யாத்திரையாக மக்காவுக்கு பயணித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் சுமார் 18.7 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
இந்த பட்டியலில் துபாய் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. வணிகரீதியாகவும், சுற்றுலாக்காகவும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களை இந்நகரம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் சுமார் 19.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் துபாய்க்கு பயணித்துள்ளனர்.
துருக்கியில் உள்ள மற்றுமொரு பிரபலமான சுற்றுலா நகரம் 'இஸ்தான்புல்'. இந்த டாப் 10 பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 19.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் இஸ்தான்புல் நகருக்கு பயணித்துள்ளனர்.
சீனாவில் உள்ள மக்காவ் நகரம் இந்த டாப் 10 பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 20.4 மில்லியன் சுற்றுலா பயணிகள் மக்காவ் நகருக்கு பயணித்துள்ளனர். ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் லண்டன் 3ம் இடத்தை பிடித்துள்ளது. 2025ல் மட்டும் சுமார் 22.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் லண்டன் நகருக்கு பயணித்துள்ளனர்.
இந்த டாப் 10 பட்டியலில் ஹாங் காங் நகரம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. 2025ல் மட்டும் சுமார் 23.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் ஹாங் காங் நகருக்கு பயணித்துள்ளனர்


Click it and Unblock the Notifications