Year Ender 2025: லோ பட்ஜெட் பெரிய லாபம்.. பாக்ஸ் ஆபிஸ் ஹாட் படங்கள் என்னென்ன?
2025ல் அதிக லாபம் ஈட்டிய லோ பட்ஜெட் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை அள்ளிய திரைப்படங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் குடும்பஸ்தன் திரைப்படம் உள்ளது. குடும்பத்திற்காக நடுத்தர குடும்பத்தை சேர்த்த ஆண் படும் பாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமாகும். வெறும் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 28 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'மாமன்'. சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவனுடைய தாய்மாமனுக்கு இடையே நடக்கும் பாச போராட்டம். 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 50 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'டிராகன்'. மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'தலைவன் தலைவி'. அதிகரிக்கும் விவாகரத்து பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமாகும். 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
2025ம் ஆண்டின் அதிக லாபம் கொடுத்த திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் சுமார் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications