Home / Photos
யோகி பாபு வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்.. தமிழ் நடிகர்கள் சிலர் மட்டுமே இந்த கார் வச்சுருக்காங்க? விலை எவ்வளவு? கிளிக்ஸ்!
By Chandru
நடிகர் யோகி பாபு வாங்கிய விலையுயர்ந்த புது காரின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' காமெடி நிகழ்ச்சியில் இவரும் ஒருவரே. அங்கிருந்து இவரின் திரை பயணம் தொடங்கியது.
2/7
Photo Credit: instagram
Share
தொடர்ந்து வெள்ளித்திரையில் எண்ட்ரியான யோகி பாபு, வெவ்வேறு படங்களில் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சின்ன ரோல் ஆனாலும் தனது இருப்பை மக்கள் மனதில் பதியவைத்துவிடுவார். கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் விருப்பமான காமெடி நாயகனாக உருவெடுத்தார்.
3/7
Photo Credit: instagram
Share
ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களின் படங்களில் காமெடியான நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும், ஃபேன்ஸ் கூட்டத்தையும் உருவாக்கிக்கொண்டார். விவேக், வடிவேலு விட்டுச்சென்ற இடத்தை சந்தானம் நிரப்பினார். அவரும் ஹீரோவாக தனது பாதையை மாற்றியதால் யோகி பாபு, சூரி அந்த இடத்தை நிரப்பினர்.
4/7
Photo Credit: instagram
Share
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள யோகி பாபு, ஒரு சில படங்களில் காமெடி நாயகனாகவும் நடித்து வருகிறார். இதன் மூலம் ஸ்டார் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் இவருக்கும் வழங்கப்படுகிறது. காமெடியனாகவும் கோடிகளில் சம்பளம் பெற்று வருகிறார்.
5/7
Photo Credit: instagram
Share
ஒரு கட்டத்தில் ஸ்டார் நடிகர்களின் படங்கள் என்றால் அங்கு யோகி பாபு கண்டிப்பாக இருப்பார். யோகி பாபு இல்லாத பெரிய படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பேசப்படும் முக்கிய நடிகராகவும் உள்ளார்.
6/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் தற்போது யோகி பாபு, விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். டொயோட்டா நிறுவனத்தின் Vellfire காரை வாங்கியுள்ளார். ஏகப்பட்ட கால்சீட்டுடன் செம பிஸியாக வெவ்வேறு இடங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும் யோகி, நிம்மதியாக பயணம் செய்ய இந்த சொகுசு கார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
7/7
Photo Credit: instagram
Share
தமிழ் திரைப்பிரபலங்கள் சிலர் மட்டுமே வைத்துள்ள இந்த காரை யோகி பாபு வாங்கியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் விஜய்யும் இந்த சொகுசு காரை தனது கார் கலெக்ஷனில் வைத்துள்ளார். டொயோட்டா Vellfire காரின் விலை 1.30-1.67 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது யோகி பாபுவின் புது சொகுசு கார் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications