'யூத்' படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? மாஸ் காட்டும் கென் கருணாஸ்!
கென் கருணாஸ் இயக்கி, நடித்த 'யூத்' திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கலக்கும் கென்: குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் கென் கருணாஸ். காமெடி நடிகர் கருணாஸின் மகனான இவர், ரகளபுரம், நெடுஞ்சாலை, அழகு குட்டி செல்லம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்து அசுரன், வாத்தி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அறிமுகமே அசத்தல்: 'யூத்' படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் கென் கருணாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அறிமுக படத்திலேயே மூன்று ஹீரோயின்ஸ். அனிஷ்மா, மீனாட்சி, பிரியன்ஷி யாதவ் என மூன்று ஹீரோயின்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மேலும் சுராஜ், தேவதர்ஷினி, நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கதை என்ன? பள்ளி மாணவனான கென், பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் செய்து 11ம்,12ம் வகுப்பு படிக்கிறார். பிடிப்பில் ஆர்வம் காட்டாத கென், காதல் செய்வது தான் கெத்து என்ற மனநிலையுடன் படிப்பில் கோட்டைவிடுகிறார்.
பள்ளியில் மோசமான மாணவன் என்று பெயரெடுக்கும் கென், மொத்தம் மூன்று காதலை சந்திக்குகிறார். எதிர்காலத்தை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் பள்ளியில் ஜாலியாக இருக்கும் கென்னின் குடும்பத்தில் பெரிய சம்பவம் ஒன்று நிகழ்கிறது.
பொறுப்பற்ற பள்ளி மாணவனாக இருக்கும் கென், அந்த சம்பவத்திற்கு பின் தனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார். அதன் பின் கென்னின் பள்ளி வாழ்க்கை என்ன ஆனது? காதல் என்ன ஆனது? என்பதை இப்படத்தின் மீதி சுவாரசிய கதைக்களம்.
பாராட்டு: ஸ்டார் நடிகர்கள் பலரும் யூத் படத்தை பாராட்டினார். சிம்பு, சூர்யா, கார்த்தி ஆகியோர் யூத் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர்.
படத்தின் பட்ஜெட்? கென் கருணாஸ் இயக்கி, நடித்த 'யூத்' திரைப்படம், 5.5 கோடி முதல் 7 கோடி ரூபாய் என குறைந்த பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
வசூல் என்ன? கடந்த மார்ச் 19ம் தேதி 5.5-7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தியேட்டரில் ரிலீசான யூத், இதுவரை 10 நாட்களில் சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனிவரும் வாரங்களில் நல்ல வசூல் இருந்தால் யூத் படத்தின் வசூல் 70 கோடியை கடந்து வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications