சூப்பர் டூப்பர் ஹிட்டான கென் கருணாஸின் யூத்.. எந்த ஓடிடியில் ரிலீஸ்? எப்போது பார்க்கலாம்?
கென் கருணாஸ் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. எந்த ஓடிடி, எப்போது பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கென் கருணாஸ்: குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் கென் கருணாஸ். தனது அப்பா கருணாஸின் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனம் கவர்ந்தார். அப்படம் கெனின் திரை பயணத்திற்கு திருப்புமுனையாக அமைத்தது.
ஹீரோ: அசுரன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை 2' படத்தில் முக்கிய ரோலில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். தொடர்ந்து வெவ்வேறு படங்களில் முக்கிய ரோலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டென இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
யூத்: கென் கருணாஸ் இயக்கி, நடித்த திரைப்படம் 'யூத்'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் சுராஜ், தேவதர்ஷினி, அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
டீன் ஏஜ் காதலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், கடந்த மார்ச் 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்றது. முழுக்க முழுக்க காமெடி, துளிர்விடும் காதல், கொஞ்சம் சென்டிமன்ட் என படம் நல்ல வரவேற்பு பெற்று செம ஹிட்டானது.
கதை என்னவென்றால், பள்ளியில் சேட்டை செய்யும் கென், படிப்பில் ஆர்வம் காட்டாமல் காதல் செய்வது தான் கெத்து என்ற மனநிலையில் உள்ளார். பள்ளி படிப்பில் கோட்டைவிட்ட கென், கல்லூரியிலும் அதே வேலையை செய்கிறார். காதல் மயக்கத்தில் உள்ளார்.
ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலிக்கும் கென்னுக்கு தான் செய்வது தவறு என்பதை உணர்த்தும் வகையில் சம்பவம் நிகழ்கிறது. அதேபோல் வாழ்க்கை மீதான எந்தவித கவலை இல்லாமல் இருக்கும் கென்னுக்கு அதனை உணர்த்தும் வகையிலும் சம்பவங்கள் நிகழ்கிறது. அதன்பின்னர் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதி கதை.
ஓடிடி? தியேட்டரில் ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்ற இப்படம், உலகளவில் சுமார் 66 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தியேட்டரை தொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications