Home / Photos
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது!
By Chandru
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக யுடியூபர் மாரித்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
1/8
Share
தமிழக அரசு பற்றி சர்ச்சைக்குரிய ட்வீட் செய்த யுடியூபர் மாரித்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
2/8
Share
இவர் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3/8
Share
இந்நிலையில் யூடியூபர் மாரிதாஸ் மணிகண்டன் மரணம் குறித்து ஊடகங்கள் மீதும் , காவல்துறை மீதும் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார்.
4/8
Share
அதற்கு முன் தமிழகத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டு பிரிவினைவாத காஷ்மீர்போல் தமிழகம் மாறுகிறதா என்ற அடிப்படையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.
5/8
Share
முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவரும் நிலையில் இவ்வாறு பதிவிடுவது அவதூறு பரப்பிடும் செயல், சமூக ஒற்றுமையை சீரழிக்கும் செயல் என மதுரை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
6/8
Share
இதையடுத்து மாரிதாஸ் அந்தப்பதிவை அழித்துவிட்டார், மாரிதாஸின் பதிவை எடுத்த சைபர் பிரிவு போலீஸார் அவர்மீது ஐபிசி 153 ,505/2ஆகியப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிதாஸை கைது செய்தனர்.
7/8
Share
அவரை கைது செய்ய போலீஸார் மதுரையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றபோது அங்கு வந்த பாஜக பிரமுகர் சரவணன் உள்ளிட்டோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் மாரிதாஸை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
8/8
Share
இந்நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications