Home / Photos
PHOTOS: டிடிஎப் வாசனுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை.. தோழியா? காதலியா? அவரே வெளியிட்ட போட்டோஸ்!
By Chandru
youtuber ttf vasan in love with actress Shaalin Zoya. check out the full details here.
1/7
Photo Credit: instagram
Share
யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் பலரையும் பார்த்திருப்போம் மதன் கௌரி, இர்பான், விஜே சித்து என சொல்லிக்கொண்டே போகலாம். அந்தவகையில் பைக் ரைட் செய்த வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். தமிழ்நாட்டின் பிரபலமான யூடியூபர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் மிகவும் சர்ச்சைக்குரிய யூடியூபர்களில் முதல் இடத்தில் உள்ளார் என்றும் சொல்லலாம்.
2/7
Photo Credit: instagram
Share
பைக் சாகசம் வீடியோக்கள் மூலம் இளைஞர்களை ஈர்த்த வாசன், அதிலும் குறிப்பாக 2கே கிட்ஸின் நாயகனாக வலம் வரும் வாசனுக்கும் போலீசுக்கும் இடையே பூர்வஜென்மத்தில் எதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கும் போல. அடிக்கடி போலீசை சிக்கிக்கொண்டே இருக்கிறார். அதிவேகமாக பைக் ஊட்டுவதும், வீலிங் செய்வதும் என வளர்ந்து வரும் இளம் தலைமுறையிரனின் ஹீரோவாக வலம் வந்தாலும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் தலைவலியாக வலம் வருகிறார்.
3/7
Photo Credit: instagram
Share
சட்ட விதிகளை மீறி வாசன் செய்யும் ஒவ்வொரு செயலும் இளைஞர்களை தவறான பாதிக்கு வழிவகுக்கும் என்பதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து. இதற்கு மத்தியில் அதிவேகத்தில் சாலையில் பயணித்த வீடியோவை வாசன் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட இது பெரும் சர்ச்சையானது. இதனால் வாசன் மீது கோவை சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு போடப்பட்டது.
4/7
Photo Credit: instagram
Share
வழக்கு பதியப்பட்டும் சும்மா இருந்தாரா வாசன், போலீசுக்கே சவால் விடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வம்பை விலைக்கு வாங்க தொடங்கினர். இப்படியாக வாசன் எது செய்தாலும் அது பஞ்சாயத்தாக மாறியது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மகாராஷ்டிராவுக்கு பைக் ரைட் சென்ற வாசன், காஞ்சிபுரம் அருகே வீலிங் செய்ய முயன்று பைக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பின் மீது மோதி அவர் ஒருபுறமும், அவரது பைக் மற்றொருபுறம் தூக்கிவீசப்பட்டது. இது சம்மந்தமான வீடியோ பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5/7
Photo Credit: instagram
Share
இந்த விபத்தில் கையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாசன். விபத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி வாசனுக்கு சிறை தண்டனை விதித்து, அவரின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தும் உத்தரவிட்டார். மேலும் வாசனின் பைக்கை ஏன் எரிக்கக்கூடாது என்றும் காட்டமாக விமர்சனம் செய்தார்.
6/7
Photo Credit: instagram
Share
சிறையில் அடைக்கப்பட்ட வாசன் நிபர்ந்தன நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியேவந்தார். பைக் ஓட்டமுடியாத நிலையில் புதிதாக பைக் அக்சஸரீஸ் கடை ஒன்றை ஓபன் செய்ய உள்ளார். இது ஒருபக்கம் இருக்க சிறைக்கு செல்லும் முன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் வாசன் நடிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வாசன் நடிகை ஒருவருடன் நெருக்கமாக போட்டோஸ் எடுத்துக்கொண்டது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
அந்த நடிகை யார் என்றல்? ராஜா மந்திரி, கண்ணகி போன்ற படங்களில் நடித்த நடிகை ஷாலின் ஜோயா. இவர் மஞ்சள் வீரன் படத்தில் வாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்களா? அல்லது வானின் காதலியா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications