முகப்பு
 » 
சுஷில் குமார் மோடி

சுஷில் குமார் மோடி

சுஷில் குமார் மோடி

சுஷில் குமார் மோடி, பாஜகவைச் சேர்ந்த அரசியல் தலைவர். பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக ஜூலை 2017 முதல் பதவி வகித்து வருகிறார்.

சுஷில் குமார் மோடி சுயசரிதை

சுஷில் குமார் மோடி, பாஜகவைச் சேர்ந்த அரசியல் தலைவர். பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக ஜூலை 2017 முதல் பதவி வகித்து வருகிறார். சுஷில் மோடி 1952ஆம் ஆண்டு பிறந்தார். அவர் பாட்னாவில் உள்ள பி.என் கல்லூரியில் இளங்கலை அறிவியல் படித்தார். மேலும் 1973ஆம் ஆண்டு பாட்னா
அறிவியல் கல்லூரியில் தாவரவியல் படிப்பில் பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக்கழகத்தில் முதுகலை தாவரவியல் பாடத்திட்டத்தை படித்து கொண்டிருந்த போது அதை விட்டுவிட்டு, ஜெய் பிரகாஷ் நாராயண் அவர்களால் தொடங்கப்பட்ட சமூக இயக்கத்தில் சேர்ந்தார். 005 முதல் 2013 வரை பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் மற்றும் நிதி அமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் ஆவார். 2011ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் தொடர்பான மாநில நிதி அமைச்சர்களின் உயர் நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

சுஷில் குமார் மோடி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சுஷில் குமார் மோடி
பிறந்த தேதி 05 Jan 1952 (வயது 72)
பிறந்த இடம் பாட்னா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் மோதி லால் மோடி
தாயார் பெயர் ரத்னா தேவி
மதம் இந்து
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

சுஷில் குமார் மோடி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹5.36 CRORE
சொத்துக்கள்:₹5.64 CRORE
கடன்கள்: ₹28.53 LAKHS

சுஷில் குமார் மோடி சுவாரசிய தகவல்கள்

1962ஆம் ஆண்டு சீனா -இந்திய போரின் போது, ​​சுஷில் மோடி தீவிரமாக பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு அணியாக திரட்டி அதில் பங்கு பெற்றார். குடிமக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தொடர்பான கமாண்டன்ட் ஆக ராணுவத்தால் நியமிக்கப்பட்டார். அவர் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுஷில் குமார் மோடி அரசியலில் கடந்து வந்த பாதை

2017
  • பீகார் மாநிலத்தின் ஐந்தாவது துணை முதலமைச்சர் ஆனார். பீகார் மாநிலத்தில் உள்ள ஜே.டி.யு.-ஆர்.ஜே.டி வீழ்ச்சிக்கு இவரின் பெரும் பங்கு இருந்தது
2010
  • 2010 பீகார் சட்டசபை தேர்தலில் சுஷில் மோடி போட்டியிடவில்லை. அவர் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரம் செய்தார்.
2006
  • சுஷில் குமார் மோடி பீகார் மாநிலநிதி அமைச்சராக பொறுப்பேற்றார்
2005
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரில் ஆட்சியைப் பிடித்ததும் சுஷில் குமார் மோடி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றார். அவர் பீகார் மாநிலத்தின் மூன்றாவது துணை முதலமைச்சர் ஆவார் . அவர் வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை.
2004
  • சுஷில் குமார் மோடி பாகல்புரிலிருந்து பதினான்காவது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் சுபோத் ரேவை தோற்கடித்தார்.
2000
  • சுஷில் குமார் மோடி சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் பீகார் மாநிலத்தின் சட்டசபை விவகார அமைச்சராக பதவியேற்றார்.
1996–2004
  • பீகார் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சுஷில் குமார் மோடி இருந்தார்.
1995
  • சுஷில் குமார் மோடி பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் ஆனார். மீண்டும் அவர் பாட்னா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
1990
  • சுஷில் குமார் மோடி தீவிர அரசியலில் மீண்டும் குதித்தார். பாட்னாவின் கும்ரர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1983–86
  • அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், அனைத்து இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்
1973–77
  • சுஷில் குமார் மோடி பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச்ச்செயலாளர் ஆனார்.

முந்தைய வரலாறு

1968
  • ஆர் எஸ்எஸ் அமைப்பின் உயரிய பயிற்சியான ஆபீசர் பயிற்சியை மூன்று வருடம் (ஓடிசி) முடித்த பிறகு, அவர் விஸ்தாரக் ஆக பணியாற்றினார். காங்கோல், டனாபுரில் பணியாற்றினார். பல்வேறு இடங்களிலும் ஆர்எஸ்எஸ்ஸின் கிளைகளைத் தொடங்கினார். பாட்னா நகரில் ஆர்எஸ்எஸ்ஸின் மாலைக் கிளைகளின் பொறுப்பை ஏற்றார்.
1962
  • சுஷில் குமார் மோடி ராஷ்டிரிய ஸ்வயம்சேக் சங் (ஆர்எஸ்எஸ்) இன் உறுப்பினரானார்.

சுஷில் குமார் மோடி சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X