முகப்பு
 » 
விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர். இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார்.

விஜயகாந்த் சுயசரிதை

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர். இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார். சில தமிழ் திரைப்படங்களை தாமே இயக்கி நடித்துள்ளார் விஜயகாந்த். 14 செப்டம்பர் 2005 அன்று மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் தனது புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 2011ல் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி சங்க கடன்களை அடைத்தார். தீவிர உடல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர் டிசம்பர் 28, 2023 அன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

மேலும் படிக்க
By Administrator Updated: Thursday, December 28, 2023, 09:54:15 AM [IST]

விஜயகாந்த் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் விஜயகாந்த்
பிறந்த தேதி 25 Aug 1952
இறந்த தேதி 28 Dec 2023 (வயது 71)
பிறந்த இடம் திருமங்கலம், மதுரை
கட்சி பெயர் Desiya Murpokku Dravida Kazhagam
கல்வி 10th Pass
தொழில் அரசியல்வாதி மற்றும் நடிகர்
தந்தை பெயர் கே.என்.அழகர்சாமி நாயுடு
தாயார் பெயர் ஆண்டாள் அழகர்சாமி
மதம் இந்து
இணையதளம் https://www.dmdkparty.com/
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

விஜயகாந்த் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹38.85 CRORE
சொத்துக்கள்:₹53.57 CRORE
கடன்கள்: ₹14.72 CRORE

விஜயகாந்த் சுவாரசிய தகவல்கள்

இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகில் பொறியியல் கல்லூரியும், சென்னை கோயம்பேட்டில் திருமண மண்டபமும் உள்ளது. கார்கில் நிவாரண நிதிக்கு ரூ5,00,000 வழங்கிய விஜயகாந்த்,ஒவ்வொரு ஆண்டும் லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு ரூ25,000 நன்கொடை வழங்குகிறார். நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்கள் கல்லூரியில் இணைவதற்கு உதவியாக, எந்தவொரு கட்டணமும் இன்றி தனது கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மூன்றுசக்கர வண்டி, இஸ்திரிப்பெட்டி போன்ற உதவிகளை வழங்கிவருகிறார். எம்ஜிஆரின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜானகி இராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாராங்களில் எம்ஜிஆர் பயன்படுத்திவந்த வாகனத்தை விஜயகாந்திற்கு வழங்கியுள்ளார். இவர் நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்திராதபோதும், இவரது பல படங்கள் மொழிமாற்றம் செய்து வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் விஜயகாந்த் பரலவாக கேப்டன் என அறியப்படுகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆரின் தீவிர ரசிகரான இவரின் பொழுதுபோக்கு கிரிக்கெட், கால்பந்து மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது ஆகும். தீவிர உடல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர் டிசம்பர் 28, 2023 அன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

விஜயகாந்த் அரசியலில் கடந்து வந்த பாதை

2016
  • இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த், 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், டிபாஸிட்டையும் பறிகொடுத்தார்.
2011
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.
2006
  • 2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2006
  • 10 மே 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், இவரது கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.
2005
  • தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் துவங்கினார்.

முந்தைய வரலாறு

2015
  • தமிழ் திரையுலகில் தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது மகன் சண்முகபாண்டியன் நடித்த சகாப்தம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
1990
  • 1990 முதல் 1999 வரை, இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நிலையில், அவற்றில் பெரும்பாலானவை அதிரடி திரைப்படங்களாகும்.
1981
  • பல்வேறு தோல்விகளுக்கு பிறகு இவர் நடித்த "தூரத்து இடி முழக்கம்" எனும் திரைப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். 1984ல் தமிழில் ஒரே ஆண்டில் 18 படங்களை வெளியிட்ட நடிகர் என்ற வரலாற்றை படைத்தார்.
1979
  • எம்.ஏ.காஜா இயக்கி, விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான "இனிக்கும் இளமை" ல் இணைந்தார்.

விஜயகாந்த் சாதனைகள்

1) 2001ல் தமிழக அரசின் கலைமாமணி விருது
2)1989ல் செந்தூரப்பூவே படத்திற்காக சிறந்த நடிகர் விருது.
3)1988ல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
4)தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர்
5)தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாநில கட்சியை தமிழகத்தில் துவங்கினார்
6)14 ஏப்ரல் 2010ல் கேப்டன் டிவி எனும் 24 மணிநேர தொலைக்காட்சியை துவங்கினார்.
7)2011ல் ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்வாகி, தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X