மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அற்புதமாக நடந்து முடிந்திருக்கிறது. 749 காளைகளை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
இது தமிழரின் வீரவிளையாட்டு.., சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் முற்பட்ட ஆதி ஆட்டம். காளைகளுடன் காளையர்கள் தழுவி பரஸ்பரம் அன்பையும், ஆண்மையும் உலகறியச் செய்யும் பெருவிழா. பெற்ற குழந்தைகளை விட ஊக்கமும்,
ஊட்டசத்தும் கொடுத்து காளைகளை வளர்க்கும் அதிசயம் நிகழும் மண் இது. கணிப்பொறிகளும், செல்போன்களும் நமது சமூகத்தை ஆக்கிரமித்து விட்டதாக ஆதங்கப்படுவோர்கள், ஜல்லிக்கட்டில் துள்ளி வரும் காளைகளையும்,
காளையர்களையும் பார்த்து மீசையை முறுக்கிக் கொள்ளலாம். இந்த வீரம் அறுந்து போகாத ஆரம். ஜல்லிக்கட்டு மைதானங்களில் எதிரொலிக்கும் ஆரவாரம் இதன் அடிநாதம். வாருங்கள்.. ஏறுதழுவும் இனிமையான பொழுதை, இந்த மண்ணின் மரபை, கொண்டாடி தீர்ப்போம்.