For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடிவெள்ளியின் உதயம்...

By Staff
Google Oneindia Tamil News

2000 ஆண்டுகளுக்குப் பின் செல்லுங்கள்..

உலகை ரட்சிக்க ஒரு விடிவெள்ளி அன்றுதான் உதித்தது ..

தாவீது குமாரன் இயேசு பிரான் இந்த மண்ணில் அவதரித்தார்

உலகைப் பிணிகளிலிருந்து மீட்க இந்த பூமியில் உதித்தார்

உலக உயிர்களுக்காக தன்னைப் பலி கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த செய்தியை, வேதாகமத்தின் திருவசனங்களில் காண்போம் ...


இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள், யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

அவள் புருஷனாகியயோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாகியிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை ரட்சிப்பார் என்றான்.

(மத்தேயு 1:18-21)

யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக் கொண்டு:

அவள் தன் முதற் பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.

(மத்தேயு 1:24-25)

ஆறாம் மாத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஊரில்,

தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.

அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்தீரிகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றான்.

அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்,

இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

(லூக்கா 1:26-31)

அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும், குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதும்படி,

கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லேகம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவ காலம் நேரிட்டது.

அவள் தன் முதற் பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.Angel

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்திருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

(லூக்கா 2:4-12)

தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போன பின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம், பெத்லேகம் ஊருக்குப் போய், நடந்ததாக கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,

தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.

கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள்.

(லூக்கா 2:15-17)

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிற முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X