For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபவ முதல் அட்சய வரை...

By Staff
Google Oneindia Tamil News

Earthகிரகங்களில் முதன்மை கிரகம் சூரியன். சூரியனையே அனைத்து கிரகங்களும் சுற்றிவருகின்றன. ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தேதி பெரும்பாலும்மாறுவதில்லை. புத்தாண்டு பிறக்கும் நேரம் மாறுவதுண்டு. ஆனால் தேதிமாறுவதில்லை.

இந்த வருடம் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி 32நிமிடங்களுக்கு பிறக்கிறது. புத்தாண்டு மறுநாள் கொண்டாடப்படும்.

தற்போது நடந்து வருவது கலியுகம். நம் முன்னோர்கள் மொத்தம் 60 தமிழ்வருடங்களை வகுத்துள்ளார்கள். ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு பெயர் உண்டு. இதுபிரபவ வருடம் என்ற பெயர் கொண்ட வருடத்தில் தொடங்கி, அட்சய என்ற பெயர்கொண்ட வருடத்தில் முடியும்.

1வது ஆண்டுக்குப் பெயர் பிரபவ ஆண்டு. 60வது இறுதி ஆண்டுக்குப் பெயர் அட்சயஆண்டு. அட்சய என்றால் அழிவற்றது. காலம் அழிவற்றது என்பதை குறிக்கும்விதமாக 60வது ஆண்டுக்கு அட்சய ஆண்டு என நம் முன்னோர்கள்பெயரிட்டிருக்கிறார்கள்.

Saturnஒரு மனிதன் தான் பிறந்த ஆண்டை மீண்டும் காண 60 வருடகாலம் வாழ வேண்டும்.60வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இப்போது நம்மிடம் விடை பெற்றுச் செல்லவிருப்பது 60 ஆண்டுகளில் 14வதுஆண்டான விக்கிரம ஆண்டு. பிறக்கவிருக்கும் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 15வதுவருடமான விஷு ஆண்டு.

தமிழ் வருடம் ஒவ்வொன்றும் 60 வருடத்திற்கொரு முறை மீண்டும் வரும். கடந்த1800ம் ஆண்டு முதல் பார்த்தால் விஷு ஆண்டு1881-1882ம் ஆண்டு வந்தது.அதன்பின் 1941-1942ம் ஆண்டு வந்தது. இப்போது மீண்டும் 2001-2001ம் ஆண்டுவருகிறது.

இதோடு நின்றுவிடவில்லை தமிழ் ஆண்டுக் கணக்கு. இதில் இன்னும் ஏகப்பட்டவிஷயங்கள் இருக்கின்றன.

நம் முன்னோர்கள் யுகங்களுக்கு பல கணக்குகள் வகுத்துள்ளனர். அதன்படி 360 மனிதஆண்டுகள் 1 தேவ ஆண்டாக கணக்கிடப்படுகிறது.

கிருதாயுகம் 4800 தேவ ஆண்டுகள் நடந்தது.... (மனித ஆண்டு கணக்குப்படி17,28,000 ஆண்டுகள்).

திரேதாயுகம் 360 தேவஆண்டுகள் நடந்தது.

துவாபாயுகம் 2,400 தேவ ஆண்டுகள் நடந்தது.

இப்போது நடப்பது கலியுகம். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இப்போதுநடப்பது 5101வது கலி ஆண்டு. அப்படியானால், கலியுகம் இன்னும் 4,26,899ஆண்டுகள் நடைபெறும்.

கிருதாயுகம், திரேதாயுகம், துவாபாயுகம், கலியுகம் என்ற இந்த நான்கு யுகத்தையும்சேர்த்து சதுர்யுகம் என அழைக்கப்படுகிறது.

அடேயப்பா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X