For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருளாளரின் அன்பு மொழிகள்

By Staff
Google Oneindia Tamil News

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் பல அன்புமொழிகள் நவின்றுன்ளார்கள் அவற்றில் சில.


Card1. பிறர் மீது பொறாமை கொள்ளலாமா?

பொறாமையை விட்டு விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நெருப்பு விறகைத் தின்பதைப் போல் பொறாமை உங்களுடைய நல்ல அமல்களின் நன்மையைத்தின்று விடும்.


2. உயிர்ப் பிராணிகளின் மீதும் இரக்கம் காட்ட வேண்டுமா?

உயிர்ப் பிராணிகள் பற்றியும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், சவாரி செய்வதற்குத் தகுதியாக இருக்கும் போது அவற்றின் மீது ஏறிச் செல்லுங்கள். அவைகளைத்து விடுமானால் கீழே இறங்கிக் கொள்ளுங்கள்.


3. அல்லாஹ் யாரை மன்னித்தருள்வார்?

யார், மன்னிக்கும் இயல்புடையவனோ அவனை அல்லாஹ்வும் மன்னித்தருள்வார்.


Prayer Card4.அனாதையை எவ்வாறு நடத்த வேண்டும்?

எந்த முஸ்லிம் வீட்டில் அனாதை மிக அன்புடன் நடத்தப்படுகிறானோ அந்த முஸ்லிமின் வீடு தான் சிறந்த வீடாகும்.


5.மோசடி செய்தவர்க்கு மோசடி செய்யலாமா?

உமக்கு மோசடி செய்பவர்க்கு நீர் மோசடி செய்யாதீர்.


6. மிகப் பெரும் பாவம் எது?

பாவங்களில் மிகப் பெரியது, அல்லாஹ்வுக்கு இணைவைத்தலும், பெற்றோர்களை மனம்நோவித்தலுமாகும்.


7. விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்வதன் நன்மை என்ன?

விதவைப் பெண்களுடையவும், ஏழைகளுடையவும் தேவைகளை நிறைவு செய்பவர், அல்லாஹ் உடையவழியில் போர் செய்வோர் அல்லது பகலில் நோன்புநோற்று இரவு தொழுது வருவோர் ஆகியவரைப் போன்றவராவார்.


8. நிறைந்த செல்வம் எது?

நிறைந்த பொருட்கள் செல்வமன்று. ஆனால் நிறைந்த உள்ளமே செல்வமாகும்.


Card9. தூய்மையாக இருப்பது அவசியமா?

தூய்மையாக இருந்து கொள்ளுங்கள். இஸ்லாம் பரிசுத்தமான மார்க்கமாகும்.


10. மனிதரில் சிறந்தவர் யார்?

எல்லாவற்றிலும் நல்ல குணங்கள் உள்ளவரே மனிதரில் சிறந்தவராவார்.


11.எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்?

(யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டு)மூன்று நாட்களுக்கு மேல் பேசாமால் இருக்காதீர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X