தீபாவளி பண்டிகை.. இந்த திசையில் மட்டும் தீபம் ஏற்றவே கூடாது! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படும் வேளையில், அனைவரும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வர். வீட்டில் நிறைய விளக்குகளை ஏற்றி வைத்து அந்த விளக்குகளின் ஒளி மூலம் இறைவனை வழிபாடு செய்தால் அது இன்னமும் நிறைய பலன்களை கொடுக்கும் என்று சொல்வார்கள். இதில் எந்த திசையில் விளக்கு ஏற்றினால் நற்பலன்கள் கிடைக்கும்?, எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுவது சிறந்தது? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும். தீபாவளி தினத்தன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.

diwali-festival-2025-which-direction-should-you-light-lamps-benefits-and-the-direction-to-avoid

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்

இந்து மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. தீபாவளி பண்டிகை வந்தாலே, எப்போது வெடி வெடிக்கலாம் என பொதுமக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் தீபாவளிக்கு முந்தைய நாளே பட்டாசு வெடித்து கொண்டாடுவதை பார்க்க முடிகிறது.

தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து சிவபெருமானை வழிபடக் கூடிய நாள் என்று சொல்கிறார்கள். தீபாவளி பண்டிகையின் போது நாம் சிவபெருமானிடம் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அதை அப்படியே சிவபெருமான் நிறைவேற்றி தந்துவிடுவார். கந்தபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய தீபாவளி திருநாளை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

விளக்கு ஏற்றுவது ஏன்?

நிறைய விளக்குகளை ஏற்றி வைத்து அந்த விளக்குகளின் ஒளி மூலம் இறைவனை வழிபாடு செய்தால் அது இன்னமும் நிறைய பலன்களை கொடுக்கும். தீபாவளி நாளை காலை 4 மணிக்கே தொடங்குகிறது. தீபாவளி நாளில், எத்தனை தீபங்களை உங்களால் ஏற்ற முடிகிறதோ அத்தனை தீபங்களை ஏற்ற வேண்டும் என்பது பொதுவாக பெரியவர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

அதேபோல, தீபாவளி நாளில் எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? எந்த திசையில் ஏற்றக்கூடாது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

எந்தெந்த திசைகளில் விளக்கு ஏற்றலாம்

* கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் பீடை அகலும், துன்பங்கள் அகலும்.
* மேற்கு திசையில் தீபம் ஏற்றி வைத்தால் சனி தோஷம், கிரக தோஷம், சல்லிய தோஷம், பங்காளி பகை, கடன் தொல்லை ஆகியவை தீரும்.
* வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும், செல்வம் உண்டாகும்.

தெற்கு திசையில் ஏற்றக்கூடாது

* தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது. இது அசுட் காரியங்களுக்கு மட்டுமே.
* தெற்கு பார்த்த வீட்டில் குடியிருப்பவர்கள் காலை, மாலை வீட்டின் முன் விளக்கேற்றி வைக்கும்போது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். * எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை பார்க்க ஏற்றி வைக்கக் கூடாது.

எந்த எண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும்?

* பசுநெய் - எல்லா சுகங்களும் கிடைக்கும். செல்வம் சேரும்.
* நல்லெண்ணெய் - எல்லா வித பீடைகளும் விலகும்.
* கடலை எண்ணெய் - இதை ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது.
* விளக்கு எண்ணெய் - தாம்பத்திய சுகம், புகழ், தேவதை வசியம் கிடைக்கும்.

கடன்கள் தீரும்

* பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணெய் ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும்.
* சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி, அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.

* ஆலயத்தில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்பை எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம்.
* வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.
* கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+