For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்புகழும் பழனியில் திருக்கல்யாணம்..இன்று தைப்பூச தேரோட்டம்..முருகனை காண குவியும் பக்தர்கள்

பார் புகழும் பழனியில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

பழனி: தமிழ்கடவுள் முருகப்பெருமான் பழனி மலையில் பால தண்டாயுதபாணியாக வீற்றிருக்கிறார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முத்துகுமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் எங்கும் மனித தலைகளாக காணப்படுகிறது.

Thaipusam Palani temple is full of miracles A cure for chronic illness

பழனி மலைக்கு எப்போது சென்றாலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த நீரையோ பாலையோ கொஞ்சம் சாப்பிடுவதன் மூலம் தீராத நோய் தீர்க்கும் என்பது நம்பிக்கை. பழனி மலை மேல் குடிகொண்டிருக்கும் தண்டாயுதபாணி சுவாமியை மனதார வேண்டிக்கொண்டு பால் பிரசாதத்தை, தீர்த்தப் பிரசாதத்தை குடிப்பதன் மூலம் தீராத நோய்கள் தீரும். கடன் பிரச்சினைகளால் ஏற்படும் மனக்கவலைகள் நீங்கி சகல சந்தோஷங்களையும் தருவார் முருகப்பெருமான்.

போகர் சித்தர் பலவித யோக கலைகளை அறிந்தவர். தன்னுடைய சக்தியின் மூலம் காடு மலைகளில் இருந்த மூலிகைகளை சேகரித்தார். அவர் சேகரித்த 4,448 மூலிகைகள் கொண்டு, 81 பாஷாணங்களாக மாற்றினார். அந்த 81 பாஷாணங்களையும் ஒன்பது பாஷாணங்களாகப் பிரித்துக்கொண்டார். அந்த நவபாஷாணங்களையும் மருந்தாக மாற்றினர். நவபாஷாணங்களை கொண்டுதான் முருகப்பெருமான் விக்ரகத்தை உருவாக்கினார் என்று பழனிமலை ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

420 அடி உயர மலையில் ஞானதண்டாயுதபாணியாக உள்ளார் முருகப்பெருமான். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சுக போகங்களையும் தரக்கூடிய தயாளனாக திகழ்கிறார் தண்டாயுதபாணி. தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது கையில் தண்டம் ஏந்தி ஆண்டிக்கோலத்தில் மேற்கு நோக்கி அழகாய் காட்சி தருகிறார்.

பழனி மலைக்கு எப்போது சென்றாலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த நீரையோ பாலையோ கொஞ்சம் சாப்பிடுவதன் மூலம் தீராத நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பழனி மலை மேல் குடிகொண்டிருக்கும் தண்டாயுதபாணி சுவாமியை மனதார வேண்டிக்கொண்டு பால் பிரசாதத்தை, தீர்த்தப் பிரசாதத்தை குடிப்பதன் மூலம் தீராத நோய்கள் தீரும். மனக்கவலைகள் நீங்கி சகல சந்தோஷங்களையும் தருவார் முருகப்பெருமான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29 ம் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெள்ளி தேரோட்டத்தில்
முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சமேதராக வலம் வந்தார்.

தைப்பூசத் திருவிழா தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு மேல் நான்கு ரத வீதியில் நடைபெற உள்ளது. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை, காரைக்குடி, தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி மற்றும் தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஆடிப்பாடி கிரிவலம் வந்து நேர்த்திக்கடனாக முருகனுக்கு செலுத்தி வருகின்றனர்.

ரெடியா? கைநிறைய சம்பளம்.. டிகிரி முடித்தாலே போதும்.. அழைக்கும் இந்திய வனப்பணி.. சூப்பர் வாய்ப்பு! ரெடியா? கைநிறைய சம்பளம்.. டிகிரி முடித்தாலே போதும்.. அழைக்கும் இந்திய வனப்பணி.. சூப்பர் வாய்ப்பு!

தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வரை தங்க தேர் புறப்படு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பழனி திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது. பக்தர்கள் மலை மீது சென்று விரைவாக சாமி தரிசனம் செய்து வரும் வகையில் படிவழிப்பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

English summary
Lord Muruga, the Tamil god, resides on Palani Hill as Palani Dandayuthapani. In view of the Thaipusa festival, the Thirukalyanam of Muthukumaraswamy Valli Deivanai Thirukalyanam was held yesterday, and the chariot race is going to be held today. Human heads can be seen everywhere as devotees have gathered from many parts of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X