தமிழக சட்டசபைக்கு மே 2021ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். திமுக தலைவராக இருந்த கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் நடைபெறும் முதல் சட்டசபைத் தேர்தல் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ரஜினிகாந்த் தொடங்கவுள்ள புதிய கட்சி, பாஜக ஆகியவை மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பாமக கட்சியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.
ரஜினியின் அரசியல் வருகையால், மொத்த அரசியல் சூழலுமே மாறக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன. தமிழ்நாடு சந்திக்கும் வித்தியாசமான தேர்தலாக இது அமைந்துள்ளது.
ஆளும் கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளது. அதேசமயம், பிற கூட்டணிகள் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை.