For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் இல்லை...60 பேர்!

Google Oneindia Tamil News

சென்னை: சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் மட்டும்தான் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுடன் சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் போதாது என்று சின்னத்திரை, பெரியதிரை தயாரிப்பு சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது.

கோரிக்கையில் 20 பேர் போதாது என்றும், அதிகப்படியான ஆட்களை வைத்து சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் சின்னத்திரை, பெரியதிரை தயாரிப்பு சங்கங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.

இதையடுத்து நாளை முதல் 60 பேரை வைத்து ஷூ ட்டிங் நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவுப் பிறப்பித்து இருக்கிறது. 60 என்பதில் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகையர் மட்டும் அல்லாமல் டெக்னீசிஷியன்ஸ் உட்பட என்றும் தெரிவித்து இருக்கிறது தமிழக அரசு.

Kanmani Serial:மாலைக்குள்ளே தாலியா...? ஒர்கவுட் ஆகலையேKanmani Serial:மாலைக்குள்ளே தாலியா...? ஒர்கவுட் ஆகலையே

 சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

சென்னையில் படப்பிடிப்பு நடத்த சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், மற்ற ஊர்களில் ஷூட்டிங் நடத்த, அந்தந்த வட்டாட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது தமிழக அரசு,.இப்படி எல்லாவித கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடத்த நாளை முதல் அனுமதியும் வழங்கி உத்தரவுப் பிறப்பித்து இருக்கிறது.

 கோவிட் 19 லாக்டவுன்

கோவிட் 19 லாக்டவுன்

கோவிட் 19 தொற்று காரணமாக மத்திய அரசு, தமிழக அரசு விதித்து இருந்த லாக்டவுன் காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இன்னமும் கோவிட் 19 தொற்று என்பது கட்டுக்குள் வரவில்லை என்றும், மென்மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்றும்தான் அன்றாட செய்திகள் கூறும் தகவல்களாக இருக்கிறது.

 சின்னத்திரை ஷூட்டிங்

சின்னத்திரை ஷூட்டிங்

இந்த நேரத்தில் சின்னத்திரை சீரியல்களுக்கு ஷூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. தொலைக்காட்சி பணிகள் இந்த லாக்டவுன் நேரத்தில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் பாதிக்கபடவில்லை என்று சொல்லலாம். இப்போது சீரியல்கள் ஷூட்டிங் நடத்தவும் அனுமதி வழங்கி இருப்பதால், 99 சதவிகிதம் தொலைக் காட்சிகள் வழக்கம் போல் செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 ரிஸ்க்தான்...படைப்பு?

ரிஸ்க்தான்...படைப்பு?

உண்மையில் ரிஸ்க் எடுத்துதான் சீரியல் ஷூட்டிங் நடைப்பெற இருக்கிறது. எனவே, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளில் கவனம் செலுத்தி, தரமான சீரியல்களை மக்களுக்கு தர வேண்டும் என்பது மட்டுமே ரசிகர்களின் கோரிக்கை. பின்னே அவர்களின் கோரிக்கை வேறு என்னவாக இருக்க முடியும்?

English summary
The Tamil Nadu government has sanctioned such restrictions that only 20 people can conduct serial shooting. The 20-year-old film maker has demanded that the Tamil Nadu government should not have enough people to do the serial shoot with the actor, actresses and technicians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X