For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வில்லத்தனம், கள்ளத்தனம்.. இதெல்லாம் இல்லாம.. அழகான கொண்டாட்டம்.. சூப்பர் சின்னத்தம்பி

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலில், சின்னத்தம்பி அவங்க அப்பா-அம்மாவுக்கு 60 ம் கல்யாணம் பண்ணி வைக்கறது ரொம்ப நல்லாருக்கு. தம்பதியை, பொண்ணு மாப்பிள்ளையா அத்தனை பேரும் ட்ரீட் பண்ற விதமும் மனசுக்கு இதமா இருக்கு.

எப்போ பார்த்தாலும் வில்லத்தனம், கள்ளத்தனம், கொலை, கொள்ளை, திருட்டு, புருஷன் பொண்டாட்டி சண்டை, இல்லை வீட்டுல இருக்கறவங்க கூட சண்டை, சவால்னு பார்த்து, மனசுல வலியோட மக்கள் இப்படியும் இருப்பாங்களான்னு யோசிக்கற பெண்களுக்கு சின்னத்தம்பி சீரியல் ஒரு மாறுதலாத்தான் இருக்கு.

சில வீடுகளில் அப்பான்னா இன்னும் மிலிட்ரி மேன் மாதிரிதான். பாவம் அவர் நார்மலா இருந்தாலும், அப்பா அப்பான்னு சொல்லியே அம்மா மிரட்டி வச்சுருவாங்க. பெரிசானாவுடனே அந்த ஒட்டுதல் இல்லாம போயிரும். அதனாலேயே பசங்க எப்போதும் நண்பர்கள் வீடே கதின்னு கடப்பாங்க.

யோசிக்காதீங்க.. நிக்க வச்சு சுடுங்க.. போட்ருங்க சார்.. நடிகை விஜயலட்சுமி ஆவேசம்! யோசிக்காதீங்க.. நிக்க வச்சு சுடுங்க.. போட்ருங்க சார்.. நடிகை விஜயலட்சுமி ஆவேசம்!

அப்பா கத்துவார்

அப்பா கத்துவார்

சில வீடுகளில் அம்மா எரிஞ்சு விழுவங்க, அப்பா எப்பவும் கத்திக்கிட்டு இருப்பார்.பிள்ளைங்களுக்கு நிம்மதி இருக்காது. இதை எல்லாத்தையும் இனி வரும் தலைமுறைகள் மாத்தி, குடும்பத்தை குதூகலமானதா மாத்த வேண்டிய பொறுப்பு அதிகமாகவே இருக்கு.

குடும்பத்தோடு

குடும்பத்தோடு

குடும்பத்தோட உட்கார்ந்து டிவி பார்க்கறதுன்றதும் அரிதாகிப் போன நிலையில், நல்ல சீரியல்களை குடும்பத்துடன் பார்க்க வேண்டியதும் அவசியம். அப்போதான் இது நல்லது, இது கெட்டது என்று பெரியவர்கள் ஒரு காட்சி வரும்போது வளர்ந்த பிள்ளைகளுக்கு எடுத்து சொல்ல முடியும். சீரியல்னாலே மோசம் என்ற மன நிலையில முதலில் மாற்றம் இருக்கணும்.

நகைச்சுவை சேனல்கள்

நகைச்சுவை சேனல்கள்

பல வீடுகளில் எப்போதும் ஆதித்யா போன்ற நகைச்சுவை சேனல்கள் மட்டுமே பார்ப்பாங்க. குடும்பத்தோட சிரிக்கற சத்தம் கூட கேட்டு இருப்போம்.. குடும்பத்தோட சிரிக்கறது, ஏதாவது கொண்டாடுவது, ஏன் குடும்பத்தோட அழுவது கூட ஒரு வகை சந்தோஷம்தான்.

குதூகலம்

குதூகலம்

பிள்ளைகள் வளர்ந்து ஆளாகிவிட்டால், நம்ம உண்டு நம்ம பொழப்பு உண்டுன்னு நினைக்காம வீட்டுலபெரியவங்க மகிழற மாதிரி அடிக்கடி ஏதாவது கொண்டாட்டம் ஏற்பாடு செய்ங்க. ஒண்ணுமே இல்லையா பிறந்த நாள், வீட்டுல இருக்கற வயசானவங்க பிறந்த நாளா இருந்தாலும் சரி சந்தோஷமா கொண்டாடுங்க.

மரியாதை

மரியாதை

மறக்காம அப்பா அம்மாவுக்கு 60ம் கல்யாணம் பண்ணுங்க. இதுல பிள்ளைங்களுக்கு கிடைக்கற சந்தோஷமும், பெத்தவங்களுக்கு கிடைக்கற சந்தோஷமும் எப்படிப்பட்டதுன்னு சின்னத்தம்பி சீரியல் பார்த்து பலருக்கும் தெரிய வந்திருக்கு.

English summary
Chinnathambi serial is a change for women to think about when there are villains, illusions, murder, robbery, theft, husband's pontatti fighting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X