For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பம்பாய் டு தமிழ்ச்செல்வன்.. உதவி இயக்குநரா இருந்தேன்...நடிகர் மனோஜ்

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மனோஜ் பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.அப்போது மணிரத்னம் அவர்களின் பம்பாய் படம் முதல் பாரதிராஜாவின் தமிழ்ச்செல்வன் படம் வரை உதவி இயக்குநராக இருந்தேன் என்று கூறினார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் என்கிற பாரபட்சம் எல்லாம் சினிமா உலகத்துக்கு இல்லை என்று கூறுகிறார் மனோஜ்.

நடிகனாக வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லாமல் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் இயக்குநர் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததாக கூறினார் மனோஜ்.

ஆண்டவா.. என் பொண்டாட்டி அவனை விட்டுட்டு.. வந்துடணும்.. கொல்லவும் துணிந்த மனைவி.. கலங்கிய கணவர்!ஆண்டவா.. என் பொண்டாட்டி அவனை விட்டுட்டு.. வந்துடணும்.. கொல்லவும் துணிந்த மனைவி.. கலங்கிய கணவர்!

 கதை ரெடிப்பா

கதை ரெடிப்பா

ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டு, அப்பாவிடம் ரொம்ப நாளாக அப்பா ஸ்கிரிப்ட் ரெடிப்பா.. நான் டைரக்ட் பண்ணனும். கதை கேளுங்க என்று ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்ததாகவும். அப்பா இதோ அதோ என்று நாட்களை தள்ளிக்கொண்டே இருந்ததாகவும் கூறினார்.

 நீ நடிகனாயிடேன்

நீ நடிகனாயிடேன்

பின்பு ஒருநாள் டைரக்டராக்கறது ரொம்ப கஷ்டம்.. நீ நடிகனாயிடேன்னு சொன்னாராம் அப்பா பாரதிராஜா. மனோஜுக்கு தூக்கி வாரிப் போட்டதாம். என்னப்பா இப்படி சொல்றீங்கன்னு கேட்டு கிட்டத்தட்ட ரொம்ப நாட்கள் வீட்டில் கோல்ட் வார் நடந்துச்சாம்.

 என் ஆசை

என் ஆசை

நான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டு வந்தேன்...என் ஆசையை உன் மூலமா பார்த்துக்கறேன்னு சொன்னாராம் அப்பா பாரதிராஜா. ஒரு வழியா சமாதானம் ஆகி அமெரிக்கா போயி நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு, வந்து குருநாதர் மணிரத்னம் கதையில் நடிச்ச படம்தான் தாஜ்மஹால்.

 பயங்கரமான திட்டு

பயங்கரமான திட்டு

10 நாட்கள் அப்பாகிட்டே பயங்கரமான திட்டு வாங்கினேன். காமிராவுக்கு பின்னால இருந்து வொர்க் பண்ணின அனுபவம் இருந்ததால காமிராவுக்கு முன்னால ஃபியர் அவ்வளவா இல்லை. ஆனால், அப்பாகிட்டே 10 நாட்கள் பயங்கரமா திட்டு வங்கினேன்னு சொன்னார் மனோஜ். எத்தனை பெரிய இயக்குநரின் மகன் என்றாலும் சினிமா உலகத்தில் பட வேண்டுவதை பட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறினார்.

English summary
Actor Manoj, who was speaking at Sun TV's vanakkam thamizha , shared many memories.Manoj says that the prejudice of director Imam Bharathiraja's son is not for the cinema world.Manojit said that he joined director Mani Ratnam Chair in his desire to be an actor without the desire to be an actor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X