• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Sundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது!

|

சென்னை: சில நடிகைகளை நாம் மறக்கவே முடியாதுங்க.. சின்னச் சின்ன ரோல்களில்தான் நடிச்சிருப்பாங்க. ஆனால் அதில் அவர்கள் அழுத்தமாக முத்திரை பதிச்சிருப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு நடிகைதான் நம்ம இந்து.

இவரது முகவரி கே. பாலச்சந்தர்தான். ஆமாங்க, கே.பி மூலமாகத்தான் டிவிக்கு நடிக்க வந்தாங்க. எம்ஏ ஆங்கிலம் படிச்ச படிப்பாளிதான் நம்ம இந்து. பூர்வீகம் தெலுங்கு. ஆனாலும் அட்சர சுத்தமாக தமிழ் பேசுவார்.

அழகுச் சிரிப்புக்கு சொந்தக்காரியும் கூட. அவரோட அழகே அந்த மேலுதட்டு மச்சம்தான். அத்தனை அழகாக அது அமைந்திருக்கும். குறிப்பாகவே மேலுதட்டு மச்சம் பெண்களின் முகத்திற்கு புது வசீகரம் கொடுக்கும் என்பார்கள்.

sembaruthi serial: அச்சு அசல் ஒரே கை ரேகை 2 பேருக்காமே.. எப்புடி நம்புனீங்க அகிலாண்டேஸ்வரி?

 காசளவு நேசம்

காசளவு நேசம்

கே.பாலச்சந்தர் மூலம் சீரியல்களுக்கு வந்தவர். ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த இந்து அதில் தனி முத்திரை பதித்தார். அவருக்கு வந்த பாத்திரங்கள் எல்லாமே குடும்பப் பாங்கான ரோல்கள்தான். கிடைத்த வேடங்களை விடாமல் அசத்தினார் இந்து. காசளவு நேசம், என் பெயர் ரங்கநாயகி ஆகியவை இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த சில சீரியல்கள்.

காதல் கோட்டை

காதல் கோட்டை

சீரியல்களில் கிடைத்த அறிமுகத்தால் காதல் கோட்டை பட வாய்ப்பு இந்துவைத் தேடி வந்தது. அதில் மாடர்ன் பொண்ணாக, நம்ம ஹீரோயின் தேவயானி தோழியாக அசத்தியிருப்பார் இந்து. இந்த ரோல் அவருக்கு சினிமாவிலும் புதிய அடையாளத்தைக் கொடுக்க பிறகென்ன திரைப்படங்களில் பிசியானார் இந்து. என்ன ஒன்னு, இவரது முகவெட்டும், உடலமைப்பும் இவருக்கு குடும்பப் பாங்கான ரோல்களையே அதிகம் வாரிக் கொடுத்தன.

சிம்ரன் அக்கா

சிம்ரன் அக்கா

ஹீரோயின் தோழி, அக்கா, அண்ணி இப்படிப்பட்ட ரோல்கள்தான் அதிகம் வந்தன. சிம்ரன் அக்காவாக பிரியமானவளே படத்தில் நடித்திருப்பார். அதிலும் அழுத்தம் பதித்திருப்பார். பிறகு, சேரன் படங்களில் நடித்திருந்தார். எல்லாமே இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்தான். கிடைத்த ரோல்களை சிறப்பாக செய்யக் கூடிய திறமை இவருக்கு இருந்ததால் எல்லாமே பேசப்பட்டன.

பப்பிம்மா ஸ்ரீதேவி

பப்பிம்மா ஸ்ரீதேவி

" எனக்கு பப்பிம்மா (அதாங்க நடிகை பத்மினி), ஸ்ரீதேவி ரொம்பப் பிடிக்கும். அவர்களைப் போல நடிக்க ரொம்ப ஆசையா இருக்கு" என்று ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார். காரணம் இவர்கள் இருவரும் கவர்ச்சி காட்டாமலேயே அருமையான ரோல்களில் நடித்தவர்கள். அந்த அடிப்படையில்தான் இவரும் தன்னைப் பற்றி மறைமுகமாக இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

சுந்தரம் குடும்பத்தினர்

சுந்தரம் குடும்பத்தினர்

ஒரு கட்டத்தில் சினிமாவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கூடிப் போக இந்துவைக் காணவில்லை. அவருக்கான வாய்ப்புகள் குறைந்ததா அல்லது இவரே ஒதுங்கினாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது மீண்டும் லைம்லைட்டில் வந்துள்ளார் இந்து. இது சீரியல் மூலம். அதாவது பாலிமர் டிவியில் சுந்தரம் குடும்பத்தினர் என்று ஒரு சீரியல் வருகிறது. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட சீரியல் இது.

மேலுதடு மச்சம்

மேலுதடு மச்சம்

முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட சீரியல். சிங்கப்பூரின் வசந்தம் டிவியில் பிரபலமான சீரியல் இது. இப்போது நம்ம பாலிமரில் இது வருகிறது. இதில் இந்து முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் பாருங்க.. ஆள் அடையாளமே தெரியவில்லை. நன்றாக சதை போட்டுள்ளார். ஆனால் அந்த முக அழகு அப்படியே இருக்கிறது. குறிப்பாக அந்த மேலுதட்டு மச்சம்தான் இவரை இந்து என்றே அடையாளம் காட்டுகிறது.

முதிர்ச்சியான பாத்திரம்

முதிர்ச்சியான பாத்திரம்

முதிர்ச்சியான பாத்திரத்தில் அழுத்தமாக நடித்துள்ளார் இந்து. இந்த சீரியல் இந்துவுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்றே நம்பப்படுகிறது. காரணம், கதை அப்படி சத்தாக உள்ளது. நிச்சயம் தமிழ் டிவி சீரியல் உலகில் இந்து மீண்டும் ஒரு மெகா ரவுண்டு வருவார் என்று நிச்சயம் நம்பலாம்ங்க.. பார்க்கலாம்.

 
 
 
English summary
K. Balachander by Serial. indhu who initially appeared in serials, put a separate stamp on it. All of the characters that came to him were family rolls. indhu is not allowed to get the roles. Some of the serials that gave him his name are Kashyam Allisam and My Name is Ranganayaki.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X