"கைவசம் தொழில் இருக்கு".. எதிர்நீச்சல் ஈஸ்வரியின் திடீர் போஸ்ட்! சீரியலுக்கு முழுக்கா.. பரபரப்பு
கொழும்பு: இப்போ என் கைவசம் ஒரு தொழில் இருக்கே, கவலை எதற்கு என கேட்டுள்ள நடிகை கனிகா போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திரைப்படம் என்றில்லை சீரியலில் நடித்தாலும் மக்கள் மனதை பிடிக்கலாம் என்பதை கே பாலசந்தர் காலத்து சீரியல்கள் முதல் இன்றுள்ளவை வரை சீரியல்களும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல். இது அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரம்தான் அனைத்துமே. அப்படி அந்த கேரக்டருக்கு உயிரோட்டமாக இருந்தவர் நடிகர் மாரிமுத்து.
இவர் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இவரது மதுரை தமிழ், நக்கல், நய்யாண்டித்தனமான பேச்சு உள்ளிட்டவைகளால் ரசிகர்கள் மாரிமுத்துவை பெரிதும் விரும்பினர். மேலும் அவருக்கென தனி ஆர்மியெல்லாம் தொடங்கப்பட்டது. அது போல் அவர் வில்லனாக இருந்தாலும் அவரை பல பெண்களுக்கு பிடித்திருந்தது.
பெண்ணடிமைத்தன கேரக்டர் நடித்திருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர் மறைந்தவுடன் வேல ராமமூர்த்தி இந்த கேரக்டருக்கு பொருத்தமான இருப்பார் என கருதப்பட்டது. அவரிடம் கால்ஷீட் தட்டுப்பாடு என்பதால் அதுவரை குணசேகரன் கேகர்டரே இருக்காதபடி கதை களம் அமைந்தது. இதையடுத்து வேல ராமமூர்த்தியின் கால்ஷீட் கிடைத்தவுடன் தற்போது அவர் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் மாரிமுத்து இருக்கும் போது பெரிதும் பேசப்பட்டவர் கனிகா. அதாவது ஈஸ்வரி கேரக்டர். இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மாதவனுடன் எதிரி, சேரனுக்கு ஜோடியாக ஆட்டோகிராப், அஜித்துக்கு ஜோடியாக வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் ஜெனிலியா, சதா, ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு டப்பிங் பேசியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் மலையாள படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார். தமிழில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளன. சமூகவலைதளங்களிலும் இவர் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடவும் செய்கிறார். இந்த நிலையில் இவர் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கைவசம் தொழில் இருக்கு என கேப்ஷன் போட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications