For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லோரும் வந்து குவிந்ததால்.. ஓடிடிக்கு வந்த மவுசு.. கிடுகிடுவென அதிகரித்த விளம்பரங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் இது விளம்பர காலம் என்று சொல்லும்படி எதிலும் விளம்பரம் எல்லாவற்றிலும் விளம்பரம் என்று ஆகிப்போனது. OTT ஆப் பார்த்தால் அதில் விளம்பரம்... OTT ஆப் பாருங்க என்று டெலிவிஷனில் விளம்பரம்....!

OTT ஆப் என்று சந்தா கட்டி நிம்மதியா படுத்துக்கொண்டு அதில் நிகழ்ச்சிகள், படங்கள் என்று பார்த்தால்... அதிலும் பல விளம்பரங்கள் என்று விளம்பரதாரருக்கு அட்றா சக்கை காலம் ஆகிப்போச்சு.

இந்த காலகட்டத்தில், தொலைக்காட்சியில் OTT தளங்களின் விளம்பரங்கள் 33 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளதாம்.. கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒப்பிடும்போது ​​இந்த வருடம் OTT இயங்குதள விளம்பரங்கள் 1.7 மடங்கு அதிகரித்து இருக்கிறது என்கிறார்கள்.

மொத்தமாக விளம்பரங்கள்

மொத்தமாக விளம்பரங்கள்

OTT இயங்குதளங்களின் விளம்பரங்கள் மொத்தமாக 40 சதவிகிதம் அதிவேக வளர்ச்சி கண்டு இருப்பதாகவும், இதன் ஒரு நாள் விளம்பர சதவிகித அளவு 66 சதவிகிதம் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது. லாக்டவுன் நேரத்தில் மக்கள் OTT இயங்கு தளங்களில் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள், படங்கள் என்று பார்ப்பது அதிகமாகி உள்ளதால், இதை கணக்கிட்டு OTT இயங்கு தளங்களில் விளம்பரங்கள் குவிகின்றன என்று சொல்கிறார்கள்.

இந்தி திரைப்படங்கள்

இந்தி திரைப்படங்கள்

தொலைக்காட்சி விளம்பரங்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது இந்தி திரைப்படங்களை ஒளிபரப்பும் சானல்கள் மற்றும் இந்தி பாடல்கள் ஒளிபரப்பும் சானல்கள்தானாம். லாக்டவுன் நேரத்தில் அதிகம் பேரால் விரும்பிப் பார்க்கப்படுவது இவை இரண்டும் ஒளிபரப்பாகும் சானல்கள் என்பதால், இரண்டிலும் விளம்பரங்கள் அதிகரித்து வருகிறதாம்.

டாப்பில் இருக்கும் OTT

டாப்பில் இருக்கும் OTT

டாப்பில் இருக்கும் OTT இயங்குதளங்கள் ஜீ 5'ஜனவரி-மார் -20 இல் 21சதவிகிதம் விளம்பர தொகுதிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது; ஜனவரி -19 ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்த ஹாட்ஸ்டார்', ஜனவரி-மார்ச் 20 இல் 3 வது இடத்தைப் பிடித்தது. இது தவிர டிஸ்கவரி பிளஸ் ஆப் விளம்பர அளவில் பார்க்கும்போது அடுத்த இடத்தில் உள்ளதாம்.

மொத்தம் 16 புதிய OTT

மொத்தம் 16 புதிய OTT

ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் மொத்தம் 16 புதிய OTT இயங்குதளம் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்துள்ளது என்றும், இதில் தேசிய அளவிலான சானல்களில் விளம்பரம் கொடுப்பது, மற்றும் மாநில மொழி சானல்களில் விளம்பரம் கொடுப்பது என்று தனித் தனியாக மொத்தம் 16 புதிய OTT இயங்கு தளங்கள் இடம்பிடித்தன என்றும் தெரிகிறது.

டிவி OTT ஆப்

டிவி OTT ஆப்

லாக்டவுன் ஆரம்ப காலக்கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. போக போக சானல்கள் படங்களை ஒளிபரப்பத் துவங்கின. எப்போதும் திரைப்படங்கள் பார்க்கும் மோகத்தில் இருக்கும் மக்கள் முதலில் OTT ஆப் பார்த்து வந்தனர். அப்போது விளம்பரதாரர்கள் விழித்துக்கொண்டு அதில் விளம்பரங்கள் தர ஆரம்பிக்க, OTT ஆப் விளம்பரமும் தொலைக் காட்சிகளில் முதலிடம் பிடிக்க ஆரம்பித்து இருந்தன. இப்போது தொலைக்காட்சி மற்றும் OTT ஆப்களில் விளம்பரங்கள் குவிய ஆரம்பித்து இது முற்றிலும் விளம்பரதாரர் காலமாகி இருக்கிறது.

English summary
the covid 19 Infection Lockdown has become an ad in everything and anything to say it's an advertising period. OTT app Advertisement in advertisement ... OTT app view television advertisement ....!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X