Roja Serial: ரோஜா தூங்கும்போது ஒண்ணு குடுத்தது போட்டோவுக்கா?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில், தூங்கும்போது ஒண்ணு குடுத்தியே ரோஜா அதை இப்போ குடேன்னு அர்ஜுன் போட்டு வாங்கினான்.
போங்க சார்... அதெல்லாம் இப்போ குடுக்க முடியாது என்று ரோஜா சிணுங்கினாள்.
ரோஜா சும்மாதான் சொன்னேன்.. உண்மையாவே குடுத்தியா? அதை இப்போ கொடேன் என்று அர்ஜுன் கேட்டான்.
கண்டு பிடிங்க
ரோஜா.. உண்மையாவே நான் தூங்கும்போது கொடுத்தியா? அது என்ன.. இப்போ கொடேன்னு அர்ஜுன் கேட்க.. சார்.. அந்த கறை காயறதுக்குள்ளே இன்னொன்னு குடுக்க முடியாது சார்னு ரோஜா சொல்றா..அது என்ன கறை ரோஜான்னு அர்ஜுன் கேட்கறான். என் மேல அக்கறை இருந்தால் கண்டு பிடிங்க சார்னு சொல்லிட்டு ஓடிவிடுகிறாள் ரோஜா.
Nayagi Serial: சின்ன குழந்தை வாயில இது வரலாமா? சொல்றதும் நீங்க...செய்யறதும் நீங்க...என்னவோ போங்க!
கண்டு பிடிச்சுட்டேன்
ரோஜா.. நான் தூங்கும்போது என்ன குடுத்தேன்னு கண்டு பிடிச்சுட்டேன் ரோஜா. அந்த கறை போயிருச்சு.. இப்போ ஒண்ணு குடுன்னு கேட்கறான் அர்ஜுன் ரோஜாவிடம். என்ன சார் அது கண்டு பிடிச்சுட்டீங்களா என்று ரோஜா கேட்க, அர்ஜுன் தனது போட்டோவை எடுத்து கையில் வச்சுக்கிட்டு, குல்பி.. அன்னிக்கு என் போட்டோவை எடுத்து முத்தம் குடுத்ததை நான் பார்த்துட்டேன். இப்போ குடுன்னு கேட்கறான்.
சுகர் ஃபேக்டரி
போங்க சார்.. இனிமே இல்லைன்னு ரோஜா சொல்ல... உன் கிட்டே சுகர் ஃபேக்டரியே இருக்குன்னு சொல்றான் அவள் உதட்டை பார்த்த அர்ஜுன். இந்த ரொமான்ஸை ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருந்த பாலு பொண்டாட்டி யசோவைப் அதை பார்த்து நீதான் சுகர் ஃ பேக்டரியை மூடி ரொம்ப வருஷமாச்சு என்று சொல்றான். யோவ் இப்படி பேசினே தொலைச்சுருவேன்னு மிரட்டறா யசோ
பொம்பளைங்க 30 வயசுக்குள்ளே
இப்படியே ரொமான்ஸ் செய்துகொண்டே வெளியில் ஓடி வந்துடறாங்க ரோஜாவும் அர்ஜுனும். சார் வீட்டில் எல்லாரும் பார்ப்பாங்க சார் விடுங்க என்று ரோஜா சொல்ல வீட்டில் யாரும் இல்லாதப்போ ரொமான்ஸ் செய்யணும்னா நமக்கு வயசாயிரும் ரோஜான்னு சொல்றான் அர்ஜுன். பொம்பளைங்க 30 வயசுக்குள்ளே குழந்தை பெத்துக்கணும் ரோஜா.. அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தை பொறக்கும்னு மெசேஜும் சொல்றான் அர்ஜுன். இப்படி போகுது சன் டிவியின் ரோஜா சீரியல் ரொமான்ஸ்...