• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ என்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்தவ... நான்தான் உன்னை பார்த்துக்கணும்!

|

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவுக்கு. அர்ஜூனுக்கும் இடையில் ரொமான்ஸ் குறைந்து சென்டிமென்ட் அதிகமாகி இருக்கு. இதுவும் கூட சீரியலை பார்க்க தூண்டுது.

எப்போதும் காதல் மூடில் இருப்பான் அர்ஜுன்னு போட்ட கணக்கு தப்பாகி, அவன் ஒரு நல்ல ஆண்மகன், பெண்களிடம் எப்படி நடந்துக்கணும். அதையும் விட, ஒரு பிரபல லாயராக வேண்டும் என்கிற இலக்கை நோக்கி செயல்படுபவன் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும்படி காட்சிகள் அமைச்சிருக்காங்க.

குறிப்பாக தனது சின்ன வயசு போட்டோக்களை அணு எரிச்சசுட்டான்னு, ரோஜா மனம் வெதும்பி அழுவதும், அவளை சமாதானப்படுத்தி, தனது மடியில் ரோஜாவை அர்ஜுன் படுக்க வச்சுக்கறதும் அருமை.

தாமரை கஞ்சி கொண்டுவா... தாமரை காபி கொண்டு வா... ஆத்தீ.. இங்க டபுள் மாமியார்!

முகத்தையே

முகத்தையே

சமையல்கார அம்மா சுமதி வேலைக்கு வரலேன்னு, ரோஜா தன்னந்தனி ஆளா சமைச்சுருக்கா. எல்லாரும் சாப்பிட வர்றாங்க. அத்தை கல்பனாவையும் உட்கார சொல்லி, எல்லாருக்கும் தானே பரிமார்றா ரோஜா. அவள் வலது கையால் பரிமாறாமல், இடது கையால் பரிமாறுவதை கவனிச்சு. வலது கையில் என்னவோ இருக்குன்னு சொல்லி அவ முகத்தையே பார்த்துட்டு இருக்கான் அர்ஜுன்.

ஜோக் இல்லை

ஜோக் இல்லை

சாப்பிடுங்க சார்.. என் முகத்தையே பார்த்துகிட்டு இருக்கீங்கன்னு சொல்றா ரோஜா. ஒருவேளை உன் முகத்தையே பார்த்துகிட்டு இருந்தாதான் சாப்பாடு எறங்குதோ என்னமோன்னு வடிவுக்கரசி சொல்ல, யசோதாவின் புருஷன், வடிவுக்கரசியின் மருமகன் விழுந்து விழுந்து சிரிக்கறான். மாப்ள.. நான் அவ்ளோ பெரிய ஜோக்கெலாம் ஒண்ணும் சொல்லிடலை.. சாப்பிடுங்கன்னு சொல்றாங்க மாமியார்.

சாப்பிட முடியலை

சாப்பிட முடியலை

எல்லாரும் சாப்பிட்டு முடிச்சவுடனே ரோஜா சாப்பிட உட்கார்றா.. அவளால உள்ளங்கையில் சூடு காயம் பட்டிருப்பதால் சாப்பிட முடியலை. ஸ்பூனாலும் சாப்பிட முடியலை. மூடி வச்சுட்டு வந்துடறா.

கையில என்ன

கையில என்ன

ரோஜா யாரும் கவனிக்கலை.. .நான்தான் கவனிச்சேன்.. வலது கையால பரிமாறமா, இடது கையால ஏன் செய்தேன்னு கேட்கறான். அவள் தயங்க, கையை இழுத்து பார்க்கறான். கோயிலில் கையால் சூடம் ஏத்தியதை சொல்றா. எந்த தெய்வமும் நம்ம உடம்பை வருத்திகிட்டு கும்பிட சொல்லலை ரோஜான்னு சொல்லிட்டு போறான்.

பால்சாதம்

பால்சாதம்

வரும்போது பால் சாதம் கொண்டுவந்து ஊட்டிவிட முயற்சி செய்யறான். அவள் வேணாம் சார்னு சொல்ல, அடம்புடிக்காம சாப்பிடணும் ரோஜான்னு சொல்றான்.உடனே ரோஜா அழறா.. அடம்புடிக்காம சாப்பிடுன்னு அம்மாதான் சார் சொல்லி ஊட்டி விடுவாங்க. அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கல சார்னு சொல்லிட்டு அழறா.

என்னையே அம்மாவா

என்னையே அம்மாவா

என்னையே உன் அம்மான்னு நினைச்சுகிட்டு, நான் ஊட்டி விடறதை சாப்பிடு ரோஜா.எனக்கும் அணு மேல கோபம்தான் வந்துது. போலீஸ்க்கு அக்யுஸ்ட் யாருன்னு தெரிஞ்சும் சில சமயம் கண்டுக்காம விடறது மாதிரி விட்ருவாங்க.எதுக்குன்னா, அப்போதான் அவன் கூட இருக்கற மத்த அக்யுஸ்ட் யாருன்னு கண்டுபிடிக்க முடியும். அது மாதிரித்தான் அணு எதுக்காக இப்படி செய்யறா, இதனால அவளுக்கு என்ன லாபம்னு கண்டு பிடிக்கணும் ரோஜா..

உன்னை நான்தானே

உன்னை நான்தானே

கொஞ்சம் பொறுமையா இரு.. உன்கூட நான் இருக்கேன்.. நீ என்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்த பொண்ணு.. உன்னை நான்தானே நல்லா பார்த்துக்கணும்னு சொல்லிட்டு சாதத்தை ஊட்டி விடறான்.ஒரு ஆணை நம்பி ஒரு பொண்ணு அந்நிய வீட்டுக்கு வர்றது சாதாரண விஷயம் இல்லைன்றதை இந்த காட்சி உணர்த்தி கண்களில் நீரை வரவழைச்சது என்னவோ உண்மைதான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Arjun's account is broken and he is a good man and how to behave with women. More than that, the views of the people are understood to be people who realize that they are a prominent leader
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more