பாவனி இப்படித்தான் போட்டுடைத்த அக்ஷரா...அப்போ பிக்பாஸில் காட்டப்படுவது எல்லாம் பொய்யா
சென்னை: பாவனியின் உண்மையான கேரக்டரை பற்றி அக்ஷரா வெளியிட்டுள்ளார்.
அதிகமாக ஒட்டிக் கொள்ளாமல் இருப்பது பாவனியும் அக்ஷராவாக இருந்தாலும் உண்மையில் பாவனியின் குணத்தை பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஏன் 20 நாட்களாக வெளியூரில் தலைமறைவு? ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மீதான விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி

பாவனி பற்றிய அக்ஷராவின் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறுவது வழக்கமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இது அனைத்து சீசனிலும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் தற்போதைய ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு நிகழ்ச்சிகள் இருக்கும் பாவனியைப் பற்றி அக்ஷரா பேசி இருப்பது அனைவருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர்கள் இருவரும் அந்த அளவிற்கு பேசிக் கொண்டது கிடையாது. ஆனால் பாவனி இப்படியா??என்று பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

பிக்பாஸில் அறிமுகம்
ஒரு மாடல் அழகியாகவும், பிரபஞ்ச அழகியாக இருந்து பலருக்கும் பெரிய அளவில் தெரியாமல் இருந்த அக்ஷரா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் 80 நாட்களுக்கும் மேலாக தாக்குப் பிடித்தது இவருடைய ரசிகர்களால் என்று கூறப்பட்டு வந்தாலும் இவருடைய விளையாட்டு பலருக்கும் பிடித்துள்ளது. நான் கோபப்பட மாட்டேன், எனக்கு கத்திப் பேச தெரியாது என்று கூறிக் கொண்டிருந்தாலும், இவரும் பல நேரங்களில் கத்திப் பேசி வைரலாக விட்டார். ஆரம்பத்தில் தனியாகவே இருந்து இவர் யாரிடமும் மிங்கில் ஆகாமல் வீழ்ந்தாலும் பின்பு ஒரு சிலரிடம் நன்றாக செட் ஆகிவிட்டார்.

பாவனியின் உண்மையான குணம்
நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பலரும் அக்ஷராவிடம், பாவனியின் உண்மையான கேரக்டர் எப்படி?? எதனால் நீங்கள் அவரிடம் அதிகமாக ஒட்டவில்லை என்று கேள்விகளைக் கேட்டு வருகிறார்களாம். அதற்கு அவர் பாவனி உண்மையிலேயே ரொம்ப கேரிங்கான பர்சன் தான். என்ன நடந்தாலும் அந்த பிரச்சனையை சிறிது நேரத்திற்குள் மறந்துவிட்டு பேசத் தொடங்கிவிடுவார். இவரை பிடிக்கும் இவரைப் பிடிக்காது என்று அவர் யாரையும் ஒதுக்கி வைப்பது கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நான் அவரிடம் அதிகமாக ஒட்டாதாதற்குக் காரணம் ஒரு சிலரிடம் எனக்கு ஈஸியாக பழக தோன்றிவிடும் ஒரு சிலரிடம் கொஞ்சம் விலகி இருக்கவே தோன்றும் அந்த மாதிரிதான் என்று கூறியுள்ளார்.

அட...அப்படியா..??
பாவனி இயல்பான கேரக்டர் தான்.ஆனால் பலமுறை நான் அவரிடம் பேசி இருக்கிறேன். ஆனால் அது எல்லாம் வெளியில் காட்டப்பட்டது கிடையாது. எங்களுக்குள் அவ்வளவு பெரிய விரோதமும் சண்டை சச்சரவுகளும் கிடையாது. நான் அதிகமாக தாமரை, அண்ணாச்சி, ராஜு வரும் இடம் பழகி வந்ததால் அதைத்தாண்டி அதிகமாக பாவனியிடம் பேசவில்லை. அவ்வளவுதான் மற்றபடி வேறு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் கிடையாது என்று கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு தெளிவாக விளக்கங்களை கொடுத்துள்ளார்.