For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்கல் நையாண்டி லொள்ளு இவை அனைத்தும்...!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதன் மூலம் கொஞ்சமாவது சமையல் கத்துக்கலாமா என்றால் ஆமாம் என்றுதான் சொல்லலாம்.

ஏன் என்றால் அத்தனை கோமாளிகளுக்கு இடையில் சமையல் கலைஞர்களும் இடம் பெற்று சமைக்கவும் செய்யும்போது அதை பார்க்கும் நாமும் கொஞ்சம் சமைக்க கற்றுக்கொள்ள முடியும் என்றுதான் தோன்றுகிறது.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், உமா, தாடி பாலாஜி மோகன் வைத்யா போன்றவர்கள் சமைக்க மணிமேகலை,பிஜிலி போன்றவர்கள் கோமாளிகளாக களம் இறங்கி நிகழ்ச்சியை கலாய்த்து வருகின்றனர்.

தாமு, வெங்கடேஷ்

தாமு, வெங்கடேஷ்

நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு வெங்கடேஷ் பங்கேற்று உள்ளனர். மணிமேகலை, பிஜிலி போன்றவர்கள் சுத்தமாகவே சமையல் அறிவு இல்லாதவர்கள் போல இருப்பது நம்பத் தக்கதாக இல்லை என்றாலும்.. அப்படியே இருந்தாலும்.. மணிமேகலை எப்படி குப்பை கொட்டப் போகிறாரோ என்று எண்ணும்போது கவலையாகத்தான் இருக்கிறது.

காமெடி கலாய்

காமெடி கலாய்

நிகழ்ச்சியின் நடுவில் சினிமா காமெடி கலாய்கள் என்று நடிகர் கவுண்டமணி செந்தில் காமெடி கலாய்களை போட்டு நக்கல் நையாண்டி செய்கிறார்கள். அதுவும் நகைச்சுவையாக சிரிக்கும்படி இருக்கிறது. நடு நடுவில் கோமாளிகள் செய்யும் கோமாளித்தனங்கள் நகைச்சுவையின் உச்சம்.

முடியாத ரகம்

முடியாத ரகம்

கோமாளிகளில் சகிக்க முடியாத ரகம் என்று மணிமேகலை போன்ற பெண்பிள்ளைகளை சொல்லலாம். காரணம், சமையல் என்பது பெண் பிள்ளைகளின் லட்சணம் என்பதை எந்த காலத்திலும் மறுக்க முடியாது விட்டு கொடுக்கவும் முடியாது. அதை விட்டுக் கொடுத்துவிட்டு அம்போ வென்று நிற்கும் இவர்களை கோமாளிகள் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பருப்பு பெயர்

பருப்பு பெயர்

காய் பெயர் பருப்பு பெயர் தெரியவில்லை என்றும், பேபி கார்ன் பெயருக்கு பதில் ஏதோ பெயர் வைக்கிறேன் என்றும் நக்கல் நையாண்டி செய்கிறார் ஒரு பெண். சகிச்சுக்க முடியவில்லை. சமையல்கலை என்பது பெண்களுக்கு கை வந்த ஒரு நளபாக கலை. அதை விட்டுக் கொடுத்து நிற்கும் பெண்ணை கோமாளி என்று நையாண்டி செய்யும்போது பெண்களுக்கு கொஞ்சம் கூச்சம் வரத்தான் செய்கிறது.

அதுதான் ஆரம்பத்தில் சொல்லிவிட்டார்களே.. .நக்கல், நையாண்டி, லொள்ளு இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு கிடைக்கும் இந்த நிகழ்ச்சியில் என்று மறப்போம்.. மன்னிப்போம்!

English summary
Vijay TV's Kukku With Clown show can be said to be yes if you can learn some cooking.If you look at all the clowns and cook the place and cook it, you see that we can learn to cook a little.Prof. Q. Gnanasambandam, Uma, Dadi Balaji Mohan Vaidya, Manimekalai, Bijli and others are playing the clowns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X