For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Web Series: அமேசான்... நெட்ஃபிளிக்ஸ் ...போட்டியில் சிக்கிய இந்திய மொழிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: உலகின் பெரிய இணையதள வர்த்தக நிறுவனங்களான அமேசான், நெட்ஃபிளிக்ஸ் இரண்டும் இந்திய மாநில மொழிகளை பிரதானமாக வைத்து போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவில் பெரும் அளவில் பொருளாதார லாபத்தைத் தேடும் முயற்சியில் இறங்கி உள்ளன.

இதில் அமேசான், நெட்ஃபிளிக்ஸை விட அதிக சலுகைகள்... கட்டண குறைவு என்று கவர்ச்சி களத்தில் முன்னணியில் இருந்து இளசுகளை கவர்ந்து வருகிறது.

அதே சமயம் சமூகத்தின் நலனிலும் அக்கறை கொண்டுள்ள அமேசான், கொரோனா வைரஸ் பாதித்துள்ள நாடுகளின் அந்த முக்கிய பகுதிகளில் தனது இலவச சேவையை மார்ச் 31 வரை நிறுத்தியும் வைத்து இருக்கிறதாம்.

அமேசான் நெட்ஃபிளிக்ஸ்

அமேசான் நெட்ஃபிளிக்ஸ்

அமெரிக்க இணைய தள நிறுவனங்களான அமேசான், நெட்ஃபிளிக்ஸ் இரண்டும்தான் இப்போது இந்தியாவில் அதிக அளவில் வணிகத்தை பெருக்கத் திட்டமிட்டு களம் இறங்கி உள்ளன. அதன் படி இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் எதாவது ஒரு வகையில் கவனம் செலுத்தி அதை மக்களின் பார்வைக்கு கொடுக்க திட்டமிட்டு வருகின்றன.

முதலிடத்தில் வெப்சீரிஸ்

முதலிடத்தில் வெப்சீரிஸ்

அப்படியான வீடியோ வகைகளில் வெப் சீரிஸ் முதலிடத்தில் உள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதிலும் அந்தந்த மொழிகளின் பிரபலங்களை வைத்து வெப் சீரிஸ் தயாரித்து வெளியிடும்போது அது மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்ப்பதை உணர்ந்த இரு நிறுவனங்களும் அதில் முனைப்பாக இறங்கி உள்ளன. பிரபலங்களும் இப்படியான பெரிய இணைய தள நிறுவனங்களின் தயாரிப்பில் நடிக்க பெரும் ஆர்வம் காண்பித்து வருகின்றனராம்.

திஃபர்கட்டன் ஆர்மி

திஃபர்கட்டன் ஆர்மி

ஜனவரி மாதம் சரியான திட்டமிடலுடன் அமேசான் ப்ரைம் நிறுவனம் போட்டி களத்தில் குதித்து இப்போது இந்தியாவில் வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஒரு பெரும் முயற்சியாக வெப் சீரிஸ் தயாரித்து கின்னஸ் சாதனையுடன் அதை அமேசான் பிரைம் வெப் சீரீஸ் ஆக வெளியிடத் திட்டமிட்டது. அதன்படி திஃபர்கட்டன் ஆர்மி என்கிற ஹிந்தி மொழி வெப் சீரீஸை லான்ஞ் செய்தது.

ஹாலிவுட் பட ரேஞ்சில்

ஹாலிவுட் பட ரேஞ்சில்

ஹாலிவுட் படத்துக்கு நிகரான பொருட்செலவில் உருவான தி ஃபர்கட்டன் ஆர்மி வெப் சீரீஸ் தொழில் நுட்பத்திலும் அதே தரத்துடன் இருந்தது. இதை வெகு ஜன மக்களிடம் கொண்டு சேர்க்க, மும்பையில் ஒரு கின்னஸ் சாதனை இசை நிகழ்ச்சியுடன் இதை லான்ஞ் செய்து அதில் அமேசான் வெற்றியும் கண்டுள்ளது. திஃபர்கட்டன் ஆர்மி முதல் சீசன் பிரிட்டிஷ் ஆட்சியின் இரண்டாம் உலகப் போரின்போது இந்திய ராணுவத்தின் சாதனையை அடிப்படையாக கொண்ட கதை. இதன் இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இந்தியாவில் இந்த வெப் சீரீஸ் சாதனையை முறியடிக்க எந்த ஒரு இணைய தளத்தின் வெப்சீரீஸாலும் முடியவில்லையாம்.

English summary
The world's largest internet businesses, Amazon and Netflix, are competing with the Indian state languages ​​mainly in an effort to gain huge profits in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X