பிறந்தநாளில் ரக்ஷா ஹொல்லாவிற்கு கிடைத்த சோகமான செய்தி...மீண்டும் மீண்டும் அப்படியா
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் சீரியலில் அன்பு வாக நடித்துவந்த ரக்ஷா தன்னுடைய ரசிகர்களுக்கு சோகமான செய்தியை கூறியுள்ளார்.
ரக்ஷாவின் வார்த்தையைக் கேட்டு அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வந்தாலும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

மாயன் ஜோடியாக அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ரக்ஷா. இவர் இந்த சீரியலில் செந்திலுடன் ஜோடியாக நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருந்தார். இந்த சீரியலில் இவர் மாயன் ஜோடியாக நடித்து வந்ததால் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் கிடைத்து விட்டார்கள். பெண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆண் ரசிகர்களும் இவருக்கு அதிகமாக இருந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை ஊரடங்கு காரணமாக பலருடைய வாழ்க்கை மாறியது போல இவருடைய சீரியல் வாழ்க்கையும் மாறிப்போய்விட்டது.

சீரியலை விட்டு விலகிய காரணம்
ஊரடங்கு காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியது போல,இந்த சீரியலும் அப்படியே முடங்கிப் போய்விட்டது. இந்த சீரியலில் முதல் பாகத்தை திடீரென்று முடித்துவிட்டு இரண்டாவது பாகத்தை தொடங்கிவிட்டனர். அப்போது ரக்ஷா வரவில்லை என்று ரசிகர்கள் பலர் தேடிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் இனி இவர் இல்லாத இந்த சீரியலை பார்க்க மாட்டோம் என்று பலரும் கூறி வந்தனர். இவரால் தொடர்ந்து சீரியலில் கலந்து கொள்ள முடியாததால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தன்னை சீரியலில் கலந்து கொள்கிறாரா?? இல்லையா?? என்றுகூட யாரும் கேட்கவில்லை என்று ரக்ஷா கூறியிருந்தார். இந்த நிலையில் இவர் எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர் ஜீ தமிழில் சீரியலில் அறிமுகமானார்.

மீண்டும் ஜீ தமிழில் அறிமுகம்
ஜீ தமிழில் அன்பே சிவம் சீரியலில் அறிமுகமாகும் போதே இவர் நான் முன்ன மாதிரி இப்போ இல்லை கொஞ்சம் சப்பியாக மாறி விட்டேன் ஆனால் விரைவில் பழைய நிலைக்கு திரும்பி விடுவேன் என்று போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு கூறியிருந்தார். தற்போது இந்த சீரியலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் திடீரென்று இந்த சீரியலில் இருந்து இவரை விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனால் இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவரிடம் காரணம் கேட்டு வந்தனர். இந்த நிலையில் நான் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதை கூட சீரியல் குழு எனக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

பிறந்த நாளில் இப்படியா?
ரக்ஷா இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு காரணம் இவர் குண்டாக இருப்பது தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். தனக்காக இதுவரைக்கும் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி அடுத்த ப்ராஜெக்ட் ல சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளில் இவர் வாழ்த்துக்களை கூறும் ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். பிறந்தநாள் அதுவுமாக இவருக்கு எதற்காக இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். தொடர்ந்து இவர் புதிய சீரியலில் விரைவில் வர வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.