மோனிஷா.. கருப்பா இருந்தாலும் களையா இருக்காரே.. "கடலை"முத்தாக மாறிய ரசிகர்கள்!
சென்னை: பல நடிகைகளை சீரியல்களில் தற்போது காணாததால் தவித்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் அவர்கள் போடும் போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் கவிதைகளாக கொட்டி வருகிறார்கள். அந்த மாதிரிதான் அரண்மனை கிளி சீரியல் கதாநாயகி மோனிஷாவின் இன்ஸ்டாகிராமில் கருப்பு-வெள்ளை போட்டோஸ்களுக்கு ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
மலையாளக் கரையைச் சேர்ந்த இவர் அரண்மனைக்கிளி சீரியல் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமானவர். இதற்கு முன்பு மோனிஷா மலையாளத்தில் பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்து இருந்தாலும், அதில் எதிலும் கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு இந்த சீரியல் மூலம் கிடைத்திருக்கிறது.
ப்ளூ கலர் சட்டை போட்டு வந்தாரா.. டக்குன்னு எழுந்துட்டேன்.. சிலிர்த்துப் போன ரம்யா

ஜானு மோனிஷா
அரண்மனைக்கிளி சீரியலில் மோனிஷா, ஜானு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதே கேரக்டரில் ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார். இப்ப வரை எல்லோரும் இவரை ஜானு என்றுதான் குறிப்பிடுகிறார்கள் .இவர் ஏற்கனவே மலையாளத்தில் நடித்த முதல் சீரியலிலும் இவரது பெயர் ஜானு குட்டி. அதே பெயர்தான் இங்கும் வைத்திருக்கிறார்கள்.

தயக்கம்
இவர் முதன்முதலில் தமிழில் நடிக்கும் போது கொஞ்சம் தயங்கி இருக்கிறார். ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இந்த அளவுக்கு தனக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லையாம். முதலில் இவருக்கு மலையாளத்தில் இவர் கூட நடித்த ஒருவர் மூலமாதான் தமிழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் மலையாளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் நடித்தவர் இந்த சீரியலுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பாஸாக்கிய அந்த சிரிப்பு
அவர்தான் ஹீரோயின் வேடத்துக்கு மோனிஷாவை ரெக்கமன்ட் பண்ணினாராம் .அதன் பிறகு தான் இவரை ஆடிஷனில் கலந்துகொள்ள கூறியிருக்கிறார்கள். கேரளாவில் இருந்து இவரும் சென்னை வந்து ஆடிஷனில் கலந்து கொண்ட பிறகு இவரையே தேர்வு செய்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுடன் நன்றாகவே பழகி விட்டாராம் மோனிஷா. அனைவருமே ஒரு குடும்பம் போல தான் பழகுகிறார்களாம்.

ஹீரோதான் பெஸ்ட் பிரண்ட்
இவருக்கு ரொம்ப பெஸ்ட் பிரண்டு அவரு கூட கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுன் தானாம். ஏற்கனவே ரசிகர்களுக்கும் அர்ஜுன் ஜானு காதல் சீன்கள் ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து அடுத்த சீரியலிலும் அவர்கள் இருவரும் நடிப்போம் என்றும் கூறியிருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அர்ஜுனின் திருமணமும் முடிந்தது. ஆனால் அதற்கு தன்னால் போக முடியவில்லை என்று வருத்தமாக கூறியிருக்கிறார் மோனிஷா.

எர்ணாகுளத்து தேவதை
மோனிஷா, இந்த சீரியலுக்காக அவரது சொந்த ஊரான கேரளா எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு வந்து தான் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இடையில் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டதால் சொந்த ஊரிலேயே தங்கீியிருந்தார். அப்போது எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் போட்டு அதை வைரலாகி விட்டன. அவரது போட்டோக்களும் சரி, வீடியோக்களும் சரி சூப்பராகவே இருக்கிறது. வீடியோக்கள் மட்டுமில்லாமல் போட்டோசூட்டிலும் மும்முரமாக இருக்கிறார். எல்லா நடிகைகள் கையில் எடுத்திருக்கும் அதே ஆயுதத்தை இவரும் கையில் எடுத்திருக்கிறார். விதவிதமாக மாடலிலும் மேக்கப்பே இல்லாமலும் போட்டோ எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

வைரலாகும் போஸ்கள்
அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இவரை சீரியல்களில் காணாமல் இருந்த அவரது ரசிகர்களுக்கு இது ஒரு சின்ன வரப்பிரசாதமாக கிடைத்திருக்கிறதாம். அரண்மனைக்கிளி சீரியல் மூலமாக இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது இவர் எடுத்திருக்கும் பிளாக் அண்ட் வொயிட் போட்டோஸ்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது. சீரியல்களில் ஹோம்லியாக பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்களை போட்டு ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

ரசிகர்கள் ஹேப்பி
மோனிஷாவின் அழகு நடனத்தையும் இவருடைய விதவிதமான போட்டோக்களையும் ரசித்தும் பல ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரண்மனைக்கிளி சீரியல் எப்போது ஒளிபரப்பப்படும் என்றுதான் அனைத்து ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் எனக்கும் ஒன்றும் தெரியவில்லை. சீரியல் ஆரம்பிக்கப் போகிறோம் என்று கூப்பிட்டதும் ஓடி வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.. ஜானுவுக்காக ராம் காத்திருக்கிறாரோ என்னவோ.. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.