For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Aranmanai kili Serial: அடடே.. ஜானு மீனாட்சி அம்மாவிடம் குட் வாங்கிட்டா!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி முடிந்தும் தொலைக்காட்சி சீரியல்களில் தீபாவளி கொண்டாட்டங்கள முடிந்தபாடில்லை. விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஒரு வழியாக தீபாவளி முடிந்த மூன்றாம் நாள் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்து விட்டார்கள்.

அரண்மனை கிளி சீரியல் கொஞ்சம் நம்பும்படியாகவும், கொஞ்சம் நம்பாத மாதிரியும் இருப்பதால், பொறுப்பு துறப்பு ஆரம்பத்திலும், முதல் விளம்பர இடைவெளியில் இது வெறும் கற்பனை கதைதான்..

இந்த கதை மூலம் மக்கள் மனதில் மூட நம்பிக்கையை வளரச் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை.பண்டைய காலத்தில் பெரியவர்கள் கற்பனை கதைகளாக சொன்னதையே பொழுது போக்குக்காக காண்பிக்கிறோம் என்றும் வாய்ஸ் ஓவர் மூலமே தொடர்ந்து சொல்கிறார்கள்.

ரூபாயில் தீபாவளி

ரூபாயில் தீபாவளி

மீனாட்சி அம்மா வெறும் 5 லட்சம் ரூபாயில் தீபாவளி கொண்டாட வேண்டும்.தீபாவளிக்கு துணிமணிகள், பலகாரங்கள், பட்டாசுகள் என்று வாங்கி தீபாவளி கொண்டாட்டத்தை முடிச்சு காட்டு ஜானுன்னு பொறுப்பை ஜானுவிடம் ஒப்படைக்கறாங்க. ஜானுவும் சந்தோஷமா ஏத்துக்கறா.

Run Serial: நடிகர் கிருஷ்ணாவுக்கு ரன் ரேஸிங்கில் நல்ல ரன்னிங்கா?Run Serial: நடிகர் கிருஷ்ணாவுக்கு ரன் ரேஸிங்கில் நல்ல ரன்னிங்கா?

பலகாரம் பட்டாசு

பலகாரம் பட்டாசு

ஜானுவும் தீபாவளிக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் புடவை, உடைகள், பட்டாசு, பலகாரங்கள் என்று வாங்கி அசத்தி, கூடவே ஏழைகளுக்கும் அதே பணத்தில் துணிமணிகள், பட்டாசுகள் வாங்கி மீனாட்சி அம்மா கையால்; கொடுக்க வைத்து எல்லாரையும் மகிழ்விக்கிறாள்.

இவ்வளவுக்கும் பணம்

இவ்வளவுக்கும் பணம்

இவ்வளவுக்கும் பணம் போதுமானதா இருந்து இருக்காதே ஜானு. வேணும்னா இன்னும் பணம் கேட்டு வாங்கிக்கோன்னு சொல்றாங்க. நீங்க என்னம்மா இப்படி சொல்லிடீங்க.தீபாவளி பண்டிகை செலவு போக, மீதமான பணம் இது என்று ஒரு தொகையை வேறு தருகிறாள்.

குட் சொல்றாங்க

குட் சொல்றாங்க

ஜானு நீ இவ்ளோ புத்திசாலியா இருக்கியே..எனக்கு இவ்ளோ நாள் தெரியாம போச்சுன்னு மீனாட்சி அமமா சொல்ல, எனக்கு எப்பவோ ஜானு புத்திசாலின்னு தெரியும்மான்னு அர்ஜுன் பொண்டாட்டியை பெருமையாக பேசறான். எனக்கு இப்போதுதான் தெரிஞ்சுது அர்ஜுன்.ஜானுவை நம்பி எவ்ளோபெரிய பொறுப்பை வேணும்னாலும் கொடுக்கலாம். ஜானு குட் ஜாப்னு சொல்லிட்டு போறாங்க.

English summary
Diwali celebrations have not ended on TV serials. The third day of Diwali ended with a celebration of Diwali as part of Vijay TV's aranmanai kili Serial. The artanmanai kili Serial is a little believable and a little unreliable, so at the beginning of the liability campaign, the first promotional interval is just a fictional story. Through this story, there is no intention to build trust in people's minds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X