• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குத்துனா.. அரண்மனை கிளி மாமியார் மாதிரி குத்தனும்.. என்னா ஆட்டம்.. இன்னும் பார்க்கும் ரசிகர்கள்!

|

சென்னை: வயசு பொண்ணுங்க எத்தனை பேரு இணையதளத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் 40 வயசுலயும் ஆட்டத்தின் மூலமாக இணையதளத்தை கதிகலங்க வைத்த அரண்மனைக்கிளி மாமியார் மீனாட்சியின் அசத்தலான ஆட்டம் தான் இன்னும் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

  Aranmanai Kili Pragati WOW dance performance • Maina Nandhini, khushbu, Bhavana

  முதலில் வாத்தி கமிங் பாடலுக்கு இறங்கிக் குத்தினார். அடுத்து சமீபத்தில் அந்த அரபிக் கடலோரம் பாடலுக்கு சூப்பர் மூவ்ஸ் கொடுத்து அசத்தி விட்டார். அரண்மனைக்கிளி சீரியலில் மீனாட்சியாக நடித்துக்கொண்டு வருபவர் பிரகதி. மைசூர் சில்க் பேஷன் மாடலின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார்

  அதன் பிறகு நடிகர் பாக்கியராஜால் தமிழில் வீட்டில் விசேஷங்க என்னும் படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த நேரத்தில் அவர் ஏழு தமிழ் படங்களைிலும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். தெலுங்கிலும் இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

  இனிமே ஃபுல்லா சேலைதான்.. படுக்கையில் விரித்து வைத்து சிலாகிக்கும் கன்னிகா ரவி!

  ஜெயம் சிலம்பாட்டம்

  ஜெயம் சிலம்பாட்டம்

  தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில் தொடங்கி ஜெயம், சிலம்பாட்டம், அந்தோணியார் தோனி, மார்க்கண்டேயன், இஷ்டம், சித்து ப்ளஸ் டூ, யாகாவாராயினும் நாகாக்க, இனிமே இப்படித்தான், கேது, தாரைதப்பட்டை அப்படி பல படங்களில் இப்ப வரைக்கும் நடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு மூன்று வருடம் திருமணம் முடிந்ததும் நடிப்பை விட்டு விலகி இருந்தவர் இப்போது தமிழிலும் தெலுங்கிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

  மிரட்டல் மாமியார்

  மிரட்டல் மாமியார்

  சீரியலில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த அரண்மனைக்கிளி சீரியலில் அர்ஜுனின் அம்மாவாகவும் ஜானுவின் மாமியார் ஆகவும் நடிப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது .இவர் தினமும் விதவிதமான சேலையில் தொடங்கி அவருடைய அணிகலன்கள் வரை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். சீரியலில் பிசியாக இருந்தாலும் இணையதளத்திலும் தனது கவனத்தைச் செலுத்திவந்தார்.

  உடம்பு செம பிட்

  உடம்பு செம பிட்

  இந்த சீரியல் மீண்டும் சூட்டிங் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் இவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் தனது உடம்பில் கவனத்தை செலுத்தி வருகிறாராம். அதுமட்டுமல்ல தனது மனதிற்கு பிடித்ததை செய்து கொண்டு ஜாலியாக இந்த லாக் டவுனை என்ஜாய் பண்ணி கொண்டிருக்கிறாராம். இணையதளத்தில் பிசியா ஆக்டிவாக இருக்கும் இவர் டான்ஸ் ஆடியும் எக்சர்சைஸ் போட்டோக்களும் தன்னுடைய ஐடியில் குவித்து வருகிறார்.

  செம குத்தாட்டம்

  செம குத்தாட்டம்

  இவருடைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள் சீரியலில் இவர் கெத்தா நடித்து கெத்தா இருப்பதோடு பாசத்திலும் உருகி உருகி நடித்திருப்பார். ஆனால் இப்போது இணையதளத்தில் இவர் போடும் குத்தாட்டம் ரசிகர்களுக்கு பெரிய ஷாக் ஆக தான் இருக்கிறது. இவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போய் இவரா இப்படி ஆடியிருக்கிறார் என்று கமெண்ட் மழையைப் பொழிந்துருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இவர் பிக்பாஸ் 4 வீட்டுக்குள் போவதற்கு உங்களுக்கு அழைப்பு வந்தால் நீங்க போவீங்களா என்று ரசிகர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள்.

  பிக் பாஸ் வேண்டாம்

  பிக் பாஸ் வேண்டாம்

  அதற்கு இவர் கண்டிப்பாக போக மாட்டேன். ஏனென்றால் நான் நல்ல இடத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறேன். தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் என்னுடைய தகுதியை நிரூபிக்க முடியாமல் நான் இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த வீட்டிற்குள் சென்றிருப்பேன். அல்லது என்னுடைய கேரக்டர் தவறாக பேசப் பட்டிருந்தாலும் நான் எதாவது தப்பு பண்ணியிருந்தாலும் அதை நிரூபிப்பதற்காக அந்த வீட்டிற்குள் சென்றிருப்பேன். ஆனால் இந்த இரண்டுமே நான் செய்யவில்லை நல்ல ஒரு நிலையில் தான் இருந்து கொண்டு இருக்கிறேன். அதனால் அந்த வீட்டிற்குள் சென்று என்னுடைய கேரக்டரை நான் மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று ஒரு பெரிய விளக்கம் கொடுத்திருக்கிறார்.

  நல்லதை பின் பற்றுங்க

  நல்லதை பின் பற்றுங்க

  சில ரசிகர்கள் உங்களுக்கு வரும் தப்பான கமெண்டுகளை என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள் .அதற்கு அவர் நான் மட்டுமல்ல எல்லாருமே நான் சொல்வதை பின்பற்றினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் உங்கள் மனதும் சந்தோஷமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அது என்னன்னா தப்பாக வரும் கமெண்டுகளை நம் கையால் தொட கூட கூடாது அதை பற்றி யோசிக்கவே கூடாது .நமது கை விரல்கள் ஐந்தும் ஒரு போல இல்லை நம்முடைய கையில் இருக்கிற ஐந்து விரல்களை ஒன்று போல இல்லை என்னும் போது உலகத்தில் இருக்கும் மனிதர்கள் ஒரே மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை.

  கவலைப்படாதீங்க

  கவலைப்படாதீங்க

  அதனால் அவரது விருப்பத்துக்கு அவர் எதுவும் பேசிட்டு போகிறார் அதை பற்றி யோசிக்கவே கூடாது. வாழ்க்கையில் நமக்கு நல்லது நினைக்கிற நல்ல கமெண்ட் களையும் நல்லவர்களையும் நாம் வைத்துக்கொள்ளவேண்டும் மீதம் இருந்த 10% இடத்தை நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் நமக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை அதனால் அவர்களை ஓரம் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும் நமது வெற்றியை நோக்கி என்று சொல்லியிருக்கிறார்.

  புதுசா கத்துக்கணும்

  புதுசா கத்துக்கணும்

  இந்த லாக்டோன் டைம்ல வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லி இருக்கிறார். தினமும் புதிது புதிதாக கற்றுக் கொள்வதில் மனதை செலுத்த வேண்டும். அப்படி நம்ம புதுசு புதுசா கத்து கிட்டு இருந்தாலே வாழ்க்கையில் எந்த கவலையும் நமக்கு இருக்காது. கத்துக்குறதுக்கு வயது ஒரு தடையே இல்லை கடைசி வரைக்கும் கற்றுக் கொண்டே இருக்கலாம்.

  கத்துக்கிட்டே இருங்க

  கத்துக்கிட்டே இருங்க

  நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விட்டேன் இனி எதையும் கத்துக்க மாட்டேன் என்றும் எதையும் ஒதுக்க கூடாது. நாம் வாழ்க்கையில் முழுசாக கத்துகிட்டவர்கள் யாருமே கிடையாது .அதனால் புதிது புதிதாக கற்கும் போது நாம் தினமும் புதிதாய் பிறக்கிறோம் .நானும் வீட்டில் இப்போது இருக்கும் போது புதியனவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். மனதை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும் .இது தேவையில்லாத பல பிரச்சினைகளுக்கு முடிவு கொண்டுவரும் என்று கூறியிருக்கிறார்.

  மனசுதாங்க முக்கியம்

  மனசுதாங்க முக்கியம்

  இவருடைய பேச்சு இவர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இவர் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்கு வயதும் அழகும் காலமும் ஒரு காரணமே இல்லை நாமதான் அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று இந்த வயதிலும் செமையாக ஆட்டம் போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து இருக்கிறார்.. உண்மையிலேயே இக்கால இளைஞர்களுக்கு ஒரு செமத்தியான உதாரணம் பிரகதிதான்.. சந்தேகமே இல்லை.

   
   
   
  English summary
  Aranmanaikili serial actress Pragathi rocks with new dance.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X