• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரண்மனை கிளி ஜானுவை அர்ஜுன் பறக்க விடுவானா... இல்லை பார்த்து ரசிப்பானா?

|

சென்னை: விஜய் டிவியில் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் அரண்மனைக் கிளி. பணக்கார அர்ஜுன், தொழிலதிபர் மீனாட்சி அம்மாவோட பையன்.

கார் விபத்துல சிக்கி கட்டிடக் கலை நிபுணரான அர்ஜுன் கால் நடக்க முடியாமல் போகிறது. இதனால் அர்ஜுனை காதலித்த பெண் அவனை நிராகரிக்க, மீனாட்சி அம்மா தன்னிடம் வேலை பார்க்கும் பரம ஏழையின் பெரிய மகளை தன மகனுக்கு திருமணம் முடிக்க பார்க்க, மீனாட்சி அம்மா கூடவே இருக்கும் சதிகாரர்களால் திருமணப் பெண் எஸ்கேப்.

உடனடியாக மணப்பெண்ணின் தங்கைக்கும் அர்ஜூனுக்கும் மீனாட்சி அம்மா திருமணம் செய்து வைக்கிறார். இப்போது அரண்மனைக்கு மருமகளான சின்ன பெண் ஜானு மீது எல்லாருக்கும் கடுப்பு.அக்காவின் மேல் இருக்கும் கோபத்தை தங்கை மீது காண்பிக்கிறது குடும்பமே.

அன்பு மலரும்...

அன்பு மலரும்...

ஜானு கொஞ்சமே படித்திருந்தாலும் கட்டிடக் கலையில் புத்திசாலித்ததனமாக ஐடியா கொடுத்து, அது கிளையன்டிடம் நல்ல பேர் வாங்கி கொடுக்க ஜானுவின் மேல் அர்ஜுனுக்கு சாஃப்ட் கார்னர் கண்ணாபின்னான்னு ஊற்றெடுக்குது. கடு கடுவென இருந்த அர்ஜுன் அன்றிலிருந்து மாறுகிறான்.

துணைக்கு அனிதா

துணைக்கு அனிதா

நாத்தனார் துர்காவும், அவரது நலம் விரும்பி அனிதாவும் ஜானுவின் படிப்பறிவின்மை, ஏழை, அறியாமை இவைகளை வைத்து அர்ஜுன் முன்னாலேயே கிண்டலடிக்க, பல நாட்கள் பொறுமையாக இருந்த அர்ஜுன் ஜானுவுக்கு சப்போர்ட்டாக வெகுண்டு எழுகிறான்.

விஜயாவாக

விஜயாவாக

ஒரு கிளையண்டுக்கு அர்ஜுன் ஆர்க்கிடெக்ட் படம் வரைந்து ஜானுவிடம் ஆலோசனை கேட்க, ஜானுவின் நலம் விரும்பி நடிகை நந்தினி, அதாங்க நம்ம மைனா, எப்படி ஜானு உனக்கு இவ்ளோ திறமை என்று வியக்கிறாள்.அனிதா வழக்கம் போல மொக்கைத் தட்ட அர்ஜுன் அனிதாவை கடிந்து கொள்கிறான்.

ஜானு ஏன் அழறா?

ஜானு ஏன் அழறா?

அர்ஜுன் ஜானுவை அருகில் அழைச்சு உட்கார வச்சு, துர்கா, அனிதா இவங்க பேசறது எதையும் மனசுல வச்சுக்காத ஜானு.எல்லாத்தையும் தூக்கிப் போட்டுரு என்று இதமாக பேச, கணவரை சார் என்றுதான் அழைக்கும் உரிமை உள்ள ஏழைப் பெண் ஜானுவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வருகிறது.

எதையும் வச்சுக்கலை

எதையும் வச்சுக்கலை

ஜானு அழுது கொண்டே மறந்துடறேன் சார்... நான் எதையுமே மனசுல வச்சுக்கலை .நீங்க எனக்கு ஆதாரவா பேசியதையும் மறந்துடறேன் சார் ... ஏன்னா இதெல்லாம் நினைச்சு சந்தோஷப்பட எனக்கு என்ன சார் தகுதி இருக்குன்னு அறைக்கு வெளியே வந்து அழுகிறாள்.

சினிமா பாடல்..

சினிமா பாடல்..

ஜானுவை டைவர்ஸ் பண்ணும் முடிவில் இருக்கும் அர்ஜுன் மனதில் காதல் துளிர்விடுவது போல சுச்சுவேஷன் சாங் ஒலிக்கிறது... அர்ஜுன் கால் சரியாகி விடுமா, ஜானுவுடன் வாழ்வானா, கிளி பறக்கட்டும் என்று அர்ஜுன் சதிகாரர்கள் பேச்சைக் கேட்டு டைவர்ஸ் கொடுப்பானா?

குறையும் நிறையா?

குறையும் நிறையா?

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கால்கள் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வலம் வரும் அர்ஜுனின் குறையை யாரும் சுட்டிக் காட்டியதில்லை.இது நல்ல விஷயம்தான் என்றாலும், கோடீஸ்வரன் அர்ஜுன் என்பதால் மட்டுமே இது பெரிதாக நாடகத்தில் பேசப்படவில்லை எனும்போது மனசு வலிக்கத்தான் செய்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Will Arjun fly the palace parrot Janu? Views will change..Love blossom.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more