பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறிமுகமாகும் பாரதி..இனி கதையே மாறப்போகிறது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதுமுகமாக பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோ அறிமுகமாக இருக்கிறார்.
பாரதிகண்ணம்மா சீரியலின் ஹீரோ அருண்பிரசாத் வெளியீட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த சீரியல்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒரு சில ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பிடித்துவிடும். அதுவும் குடும்பங்கள் உட்கார்ந்து பார்க்கும் சீரியல்களில் அழுகை சீன்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலே வீட்டில் இருக்கும் பெண் ரசிகர்கள் அந்த சீரியலுக்கு அடிமைகளாக மாறிவிடுகின்றனர். அந்த வகையில் தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சீரியல்களில் வரிசையில் பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து வருகிறது.

பாரதிகண்ணம்மா சீரியல்
பாரதிகண்ணம்மா சீரியல் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவிக்குள் வரக்கூடாத சந்தேகங்கள் வந்தால் வாழ்க்கை எந்த அளவிற்கு வேதனை அடையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மொத்த கதையும் ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட்டில் அடங்கி இருப்பதால் பல நேரங்களில் இது நெட்டிசன்களால் கலாய்க்கபட்டு வந்தாலும் ரசிகர்களால் தொடர்ந்து ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது.

வைரலாகும் போட்டோஸ்
பாரதிகண்ணம்மாவை போலவே பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகிறது. அண்ணன்-தம்பி பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் எடுத்திருப்பதால் கூட்டு குடும்ப வாழ்க்கையை ரசிக்கும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெருத்த ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த சீரியலில் அடிக்கடி மகா சங்கமம் ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்தாலும் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் பாரதியாக நடிக்கும் அருண்பிரசாத் இந்த சீரியலில் அணியினரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

ரசிகர்களின் கேள்விகள்
பாரதிகண்ணம்மா சீரியலில் முதல் முதலாக அறிமுகமான காவியா அறிவுமணி பின்பு அந்த சீரியலில் இருந்து விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் அருண்பிரசாத் காவியாவை சந்தித்துள்ளார். அவரோடு எடுத்த புகைப்படங்களை காவியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் பாண்டியன் எனும் குழந்தையோடு அருண்பிரசாத் எடுத்த புகைப்படங்களும் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் போது ரசிகர்கள் பாரதி இந்த சீரியலில் அறிமுகம் போகிறாரா என்று கேட்டு வருகின்றனர்.