அஸ்வின் செய்த உருக்கமான செயல்.. இந்த மனதை எதிர்பார்க்கவில்லையே
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஸ்வின் தற்போது சமூக வலைத்தளத்தில் செய்த செயல் அனைவரையும் வியப்படைய வைத்திருக்கிறது.
மியூசிக் டைரக்டர் ஆசையை நிறைவேற்றுவதற்காக அஸ்வின் செய்த செயலுக்கு சக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சீன ஆப் மாதிரி பாக். ஆப் ஏதாவது இருந்தா சொல்லிடுங்க.. இப்போவே அன்இன்ஸ்டால் பண்ணிடுறேன்!

புகழ் கிடைத்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான பெண் ரசிகர்களை கவர்ந்த ஒரு போட்டியாளர் என்றால் அது அஸ்வின் ஆகத்தான் இருக்க முடியும். எத்தனையோ போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்தவகையில் அஸ்வினும் ஒருவர். அஸ்வின் ஷார்ட் பிலிம், சீரியல், ஆல்பம் பாடல்கள் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு அதிகமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக கிடைத்துள்ளது

திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அஸ்வின் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார். பத்து வருட போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்பு இவருடைய எதார்த்தமான பேச்சால் பல சஞ்சலங்களை ஏற்படுத்தி வருகிறது. அவர் நடித்த முதல் திரைப்படமான என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகள் அவருக்கு எதிராக அமைந்து விட்டது. அதனால் தற்போது இவரை அதிகமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

மியூசிக் டைரக்டரின் ஆசை
இவருக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆண் ரசிகர்களும் இருந்து வருகின்றனர். அஸ்வினுடைய முதல் திரைப்படம் அவர் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. அதுபோல அஸ்வினுக்கு இசையமைத்த ஆல்பம் மியூசிக் டைரக்டர் காட்சன் இதை நினைத்து வருத்தமாக தான் இருந்துள்ளார். அதனால் அவருக்கு அஸ்வின் ஆறுதல் கூறியுள்ளார்.

அஸ்வின் வெளிக்காட்டிய அன்பு
ஆல்பம் மியூசிக் டைரக்டர்காக அஸ்வின் செய்த செயலை பார்த்து சக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்படுகிறது. எப்போதும் போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்காக மியூசிக் அமைத்த டைரக்டருக்கு அஸ்வின் செய்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த டைரக்டர் மகிழ்ச்சி அடையும் வகையில் பாடல் கொடுப்பேன் என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.