For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Ayudha Ezhuthu Serial: சப் கலெக்டருக்கு இந்த புரபோஸல் கற்பனைதான்... நல்லாருக்கா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் ஒரு சப் கலெக்டருக்கு,ம், ஊரையே தனது கைக்குள் வைத்து அடிமைப்படுத்தும் காளி அம்மாவுக்கும் ஏற்படும் போட்டிதான் கதை.

காளி அம்மாவின் புருஷன், காளி அம்மா மீது உயிராக இருந்தாலும், அவள் செய்யும் அடாவடி செயல்கள் பிடிக்காமல் தனியாக வாழ்ந்துகிட்டு இருக்கார்.

இருவருக்கும் நான்கு ஆம்பளை பசங்க இருந்தாலும், கடைசி பையன் சக்தி மட்டும்தான் அப்பாவிடம் நன்றாக பேசுபவன், பாசமாக இருப்பவன்.

Kalyana veedu serial: அடேய் நந்தகுமார் சூர்யாவுக்கு எத்தனை மாப்பிள்ளைடா? Kalyana veedu serial: அடேய் நந்தகுமார் சூர்யாவுக்கு எத்தனை மாப்பிள்ளைடா?

சப் கலெக்டர்

சப் கலெக்டர்

அந்த ஊரின் சப்கலெக்டர் இந்திராவுக்கு, காளி அம்மாவின் கடைசி பையன் சக்திக்கும் கிட்டத்தட்ட காதல் உண்டாகும் சூழ்நிலைகள் உருவாக்கி வருது. உடன் படித்த ஒருவன் தன்னை காதலிப்பதாகவும், வீட்டுக்கு வருவதாகவும் சொல்ல, அவனை தவிர்க்க, சக்தியை காதலிப்பது போல, கல்யாண ஏற்பாடுகள் நடப்பது போல டிராமா பண்ணலாம் என்று ஐடியா கொடுப்பது சக்தியின் அப்பா.

புருஷனாக சக்தி

புருஷனாக சக்தி

வரும் கால புருஷனாக சக்தி நடிக்க, இந்திராவின் நண்பனால் இதை ஏத்துக்கவே முடியலை. சரி உங்க புரபோஸல் பத்தி சொல்லுங்கன்னு கேட்க, சக்தி கற்பனையில் சொல்ல ஆரம்பிக்கிறான். அதாவது ஒரு கோயில்.அங்கதான் இது நடக்குது. இருவரும் கற்பனை என்றாலும் அதில் சந்தோஷமாக ஆழ்ந்துதான் போகிறார்கள்.

பத்து பொருத்தமும்

பத்து பொருத்தமும்

இந்திரா கோயிலுக்கு போறா.. அப்போ அங்கே வந்த ஒரு அம்மா பூ வச்சுக்கோம்மான்னு சொல்லிட்டு, நீ மகாலட்சுமி மாதிரி இருக்கேம்மான்னு சொல்றாங்க. யாரு நீங்கன்னு கேட்கையில்,கையை நீட்டி ஒரு திசையை காமிக்கறாங்க. அங்கே பார்த்தால் ஐயர் ஒருத்தர் வர்றார். அவர் ஒரு பேப்பரை கொடுத்து பத்து பொருத்தமும் சரியா இருக்குன்னு சொல்றார். அவரும் கையை ஒரு திசை நோக்கித் திருப்ப அங்கே சக்தி நிற்கிறான்.

இல்லை அணைச்சுருங்க

இல்லை அணைச்சுருங்க

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களுக்கும் எனக்கும் எல்லா விதத்திலும் ரசனை ஒத்துப் போகாதுதான். ஆனால், ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா வாழ்வோம்ன்னு தோணுது. உங்களுக்கு என்னை பிடிச்சு இருந்தா பக்கத்துல இருக்க விளக்கை ஏத்தி வைங்க. இல்லேன்னா நான் ஏத்தி வச்சு இருக்கும் இந்த விளக்கையும் அணைச்சுருங்கன்னு சொல்றான் சக்தி.

விளக்கை ஏத்தி வைக்கிறாள் இந்திரா. இது கற்பனை புரபோஸல்தான். ஆனால், இந்திரா நண்பன் போனவுடன் இப்படி புரபோஸ் செய்தா நான் நிச்சயம் ஏத்துப்பேன்னு சொல்றா.

English summary
Vijay TV's ayudha ezhuthu Serial is about the story of a sub-collector, the mother of a slave Kali Mummy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X