• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகத்தின் "அழகு" முகத்தில் பிரதிபலிக்கும்!

|

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் சுதாவாக நடித்து வரும் நடிகை சுருதி சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது எப்படி எப்போதும் சிக்ஸ்ட்டீனாக இருக்கிறீர்கள் என்று கேட்டபோது..

எப்போதும் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் இன்வால்வ் ஆகி, நாமும் டென்சன் ஆகிவிடாமல் நம் வேலையை பார்த்துவிட்டு, நிம்மதியாக இருந்தாலே போதும். மனம் லேசாக இருந்தால் முகத்திலும் அது பிரதிபலித்து நன்றாக இருக்கும்.

மனம் இறுக்கமாக இருந்தால் அது முகத்திலும் பிரதிபலிக்கும். அதனால் எதுவும் நம்மை அஃ பெக்ட் ஆகாமல் பார்த்துக்கொண்டாலே இளமையாக இருக்கலாம் என்று சொன்னார் சுருதி. இன்றைய சிறப்பு வணக்கம் தமிழா நிகழ்ச்சியை அஸாரும், அனிதாவும் தொகுத்து வழங்கினார்கள்.

அழகு தென்றல்

அழகு தென்றல்

தென்றல் சீரியலில் நடிக்கும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. எப்படி காமிரா ஃபேஸ் பண்ணி நிக்கணும்...இந்த சீனில் எப்படி நடிக்கணும் இது எல்லாம் ஒண்ணுமே தெரியாது. ஆனால், அழகு சீரியலில் அப்படி இல்லை... கொஞ்சம் தேறிட்டேன்னுதான் சொல்லணும். அதே மாதிரி தென்றல் சீரியலில் ரொம்ப அப்பாவியான கேரக்டர். அழகு சீரியலில் கொஞ்சம் மெச்சூர்டான கேரக்டர். இன்னும் கூட தென்றல் சீரியலின் குட்டிமான்னே பலரும் கூப்பிடுவார்கள். ஆனால், குட்டிமா வளர்ந்தாச்சு.. இப்போ சுதான்னு சொல்லிகிட்டு இருப்பேன்னு சொன்னார்.

Chithi 2 Serial: சித்தி 2 இன்னும் சீரியஸாகலைங்கோ.. கொஞ்சம் ஜாலி...கொஞ்சம் ஜோலி!

அப்பா ராணுவத்தில்

அப்பா ராணுவத்தில்

பிறந்தது கேரளாவில்தான் என்றாலும் அப்பா ராணுவத்தில் இருந்ததால் பெரும்பாலும் நார்த் இந்தியாவில் வசிக்கற மாதிரி சூழ்நிலை. அதனால அங்கங்க ஸ்டடி பண்ணி இருக்கேன். ஒரு கட்டத்தில் சென்னைக்கு வந்தோம். அப்போதுதான் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுதுன்னு என்று கூறினார் சுருதி. தென்றல் சீரியலில் ரொம்ப அப்பாவியா நடிக்கும் கேரக்டர். அவங்களுக்கு என்னை பார்த்ததும் அப்படி தெரிஞ்சு இருக்கு. அதே மாதிரி ஆடிஷனில் செலக்ட் ஆயிட்டேன் என்றும் சொன்னார்.

நடிகை ரேவதி

நடிகை ரேவதி

நடிகை ரேவதியுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுகையில், ரேவதி மேம் கூட நடிக்கறது தி ஃபேன் மொமண்ட்தான். அவங்க பாட்டுக்கு நாம சின்ன வயசில் கண்ணாடி முன் நின்று டான்ஸ் ஆடி மகிழ்ந்து இருப்போம். ஆனால், அவங்க கூட நடிக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. அவங்க என் கையை பிடிச்சு பேசினால். ஆஹா ரேவதி மேம் நம்ம கையை பிடிச்சு பேசிட்டாங்கன்னு ஜாலியா ஃ பீல் பண்ணினேன் என்றும் சொன்னார்.

முதலில் ஒன்லைன் கதை

முதலில் ஒன்லைன் கதை

முதலில் ஒன்லைன் கதைதான் சொல்வாங்க. பிறகு பார்க்கும் மக்களுக்கு ஏற்ப கதையில் டிவிஸ்ட், டர்ன் எல்லாம் இருக்கும். அதனால் எனக்கே பூர்ணா என் தங்கச்சிதான்னு தெரிஞ்சப்போ ஷாக்கத்தான் இருந்துச்சு என்று கூறினார். அதே போல நான் ஒரு வக்கீல் என்றபோதும் அப்படித்தான் இருந்துச்சு. நாளைக்கு கோர்ட்டில் வாதாடும் சீன் என்றால், முதல் நாள் ராத்திரி எனக்கு தூக்கம் வராது. கணம் கோர்ட்டார் அவர்களேன்னு பேச ஆர்மபிக்கணுமோன்னு பயம் வந்துரும்.

ஜாலியா இருக்கும்

ஜாலியா இருக்கும்

எல்லாரும் ஒண்ணு சேர்ந்து டீம் வொர்க்கா பண்றதுனால ஜாலியாத்தான் இருக்கும். சில சீன்ஸ் ஷூட்டிங் போது மாப்பிள்ளையை காணோம், ஓடணும் இப்படி எல்லாம் சொல்வாங்க. அப்போ நான் புடவை கட்டி இருந்தால் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். நானேதான் ஓடணுமா சார்னு கேட்பேன்.. வேற வழி இல்லேன்னா ஓடித்தான் ஆகணும்.டேய் திருநா வேகமா ஓடாதேடான்னு சொல்லிகிட்டே ஓடுவேன் என்று கூறி சிரித்தார் சுருதி.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Actress Suruthi, who plays Sudha in Sun TV's azhagu serial, was the special guest of Sun TV's vanakkam thamizha event. When you ask how ever you are sixty ..We can only be relieved to see our work and not be a denseness of things that are always happening around us. If the mind is mild, it will reflect well on the face.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more