• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Azhagu Serial: ஒருத்தனுக்கு வேலையே இல்லையாம்...அவனுக்கு ரெண்டு கேக்குதாம்...!

|

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் திருநாவுக்கு வேலையே இல்லாமல் அர்ச்சனாவை கல்யாணம் செய்து வைக்கறாங்க. அவன் காதலி நிவி வந்தவுடன், அவளை கல்யாணம் செய்துக்க போராடறான். வீட்டிலும் இதை சொல்லி கண்டிக்க ஆளில்லை. திருநா நிவிக்காக கூட பிறந்த அண்ணனையே ரோட்டில் அடிக்கிறான்.

உத்தியோகம் புருஷ லட்சணம்னு சொல்றாங்க. ஆனால், அர்ச்சனா திருநவை காதலிக்கறான்னு தெரிஞ்ச குடும்பம் திருநாவுக்கும் அர்ச்சனாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கறாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள் செத்துட்டான்னு நினைச்ச நிவி வந்து நிக்கறா.

அழகம்மை ரேவதி, இது திருநாவோட வாழ்க்கை பிரச்சனை.. .அவனே முடிவெடுக்கட்டும்னு சொல்றாங்க... ஒரு பிள்ளையை குடும்ப நலனுக்காக கட்டுப்படுத்தும் உரிமை கூட தாய்க்கு இல்லையா என்ன? அப்போது அர்ச்சனா கழுத்தில் தாலி கட்டிவிட்ட திருநா, இப்போது நிவியை மறக்க முடியலைன்னு அவளை இழுத்துகிட்டு ஓடறான்.

திருநா நிவி

திருநா நிவி

நிவி அர்ச்சனாவுக்கு திருநாவை விட்டுக்கொடுத்துட்டு, விட்டுக்கொடுத்த வலி.. வலியில் புலம்பிக்கொண்டு இருக்க, திருநாவும் நிவியை மறக்க முடியாமல் தவிக்கிறான். இடையில் பூர்ணா திருநாவை உசுப்பேத்தி விட, நிவியை உடனே கல்யாணம் செய்துக்கணும்னு துடிக்கிறான். இப்படி ஒரு பையனுக்கு தான் ஒரு வேலையில் இல்லையேன்னு எண்ணம் வரலை. ஒருத்தியை கல்யாணம் செய்து இருக்கோமே... இன்னொருத்திக்கு தாலி கட்டத் துடிக்கிறோமே இது சட்டப்படி தப்புன்னு கூட தெரியலை.

இழுத்துகிட்டு ஓடறான்

இழுத்துகிட்டு ஓடறான்

நிவிக்கு தாலி கட்டி பொண்டாட்டியாக்கிக்கணும்னு அவளை இழுத்துகிட்டு பைத்தியம் புடிச்சவன் மாதிரி தெருவில் ஓடறான். அண்ணன் ரவி இருவரையும் துரத்திக்கிட்டு ஓடறான். அண்ணன் என்று கூட பார்க்காமல் திருநா அவனை ரோட்டில் அடிச்சு தள்ளிவிட்டு நிவியை இழுத்துகிட்டு ஓடறான். இப்படி ஒரு பையன் வீட்டுக்கு ஒருத்தன் இருந்தா நிச்சயம் நாடு உருப்பட்டு விடும். இதெல்லாம் கூடாது என்பதற்குத்தான் கடுப்பேத்தும் இந்த காட்சி.

ரேவதி இல்லை

ரேவதி இல்லை

வழக்கம் போல அழகு சீரியலில் கடந்த இரண்டு வாரமாக நடிகை ரேவதியை காணோம். இதை எல்லாம் இப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதபடி பூர்ணாவை எதிர்க்க சுதா, சகுந்தலா தேவியின் கூட்டணி என்று கதையை திசை திருப்பி சுவாரஸ்யமாக்கி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக சுதாவின் போராட்டம், பூர்ணாவின் திமிர்த்தனம் என்று சகுந்தலா தேவியாக நடிக்கும் காயத்ரி ஜெயராம் இல்லாமலும் சீரியல் நன்றாகத்தான் போகிறது.

ஒருவனுக்கு எத்தனை காதல்

ஒருவனுக்கு எத்தனை காதல்

வேலை இல்லாமல் ஒரு பையனுக்கு கல்யாணம் செய்வதும், அவனுக்கு பெண்ணை கொடுப்பதும் கூட தவறுதான். அதிலும் இவனுக்கு ரெண்டு காதல்.. இதை வீட்டில் யாரும் சுட்டிக் காட்டவில்லை. இதை ஒரு வசனத்தில் வைக்க கூட வசனகர்த்தாவுக்கு மனம் இல்லை. இதைத் தட்டிக் கேட்க வீட்டில் இருக்கும் அம்மா ரேவதி இல்லவே இல்லை. இதெல்லாம் சீரியலின் போக்குக்கு குறை என்று இயக்குநர் எப்போது உணர்வாரோ...!

இத்தனை குறைபாடுகளுக்கும் இடையில் அழகு சீரியல் சன் டிவியின் ரேட்டிங்கில் உள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
As usual we have seen actress Revathi in the beauty serial for the past two weeks. All this is now made interesting by twisting the story of Sudha and Sakuntala Devi's alliance to oppose Purna so that no one can take it too seriously. In the last one week, Sudha's struggle has been going well with the absence of Gayatri Jayaram, who plays Sakundala Devi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more