சிம்புவின் படத்தில் குழந்தையாக நடித்த உண்மையை உடைத்த பாலா... ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த சிம்பு
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டில் புது தொகுப்பாளர் சிலம்பரசன் பாலாவை கலாய்த்து தள்ளியிருக்கிறார்.
பாலாஜி முருகதாஸ் குழந்தை நட்சத்திரமாக சிம்பு திரைப்படத்தில் நடித்திருக்கிறாராம்.
ஜெயக்குமாரை தனியே சந்தித்த ஓபிஎஸ்.. கூடவே ரெண்டு மாஜிக்கள்!.. மீண்டும் 'வலுக்கிறதா' ஒற்றை தலைமை?

சிம்புவின் அறிமுகம்
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தினமும் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அது கமல்ஹாசன்தான் என்று கூறு நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் மனதில் தற்போது அந்த இடத்திற்கு புது நடிகர் வந்திருக்கிறார். நடிகர் சிலம்பரசன் கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இதற்கு முன்பு கமல்ஹாசனுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் களம் இறங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது சிலம்பரசனின் என்ட்ரி ரசிகர்களை மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களையும் பெரிய அளவில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரியாவிடை பெற்ற கமல்ஹாசன்
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிக் கொள்வதாக போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பேசி இருந்தார். அவருடைய பேச்சை கேட்டு பலரும் ஆடிப்போய் இருந்தனர். என்ன இவர் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டார் என்று, ஆனால் தொடர்ந்து தன்னுடைய பணி இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று பிரியா விடை பெற்றுக்கொண்டு கமல் கிளம்பியதும் யார் அவருடைய இடத்திற்கு வருவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்ததுய போட்டியாளர்களும் தங்களுடைய மனதில் தோன்றும் நடிகர்களின் பெயர்களை கூறிக் கொண்டிருந்தார்கள்.

சிம்பு சொன்ன நல்ல செய்தி
யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரம் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். சிம்பு ஏற்கனவே திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் தற்போது டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் தன்னுடைய இயல்பு எப்போதும் மாறாது என்று எளிமையாக ஜாலியாகவும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளே ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்து வருகிறார். போட்டியாளர்களுக்கு மேலும் எனர்ஜி ஊட்டும் வகையில் இந்த வாரம் நோ எவிக்ஷன் என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றனர்.

பாலாஜி சொன்ன உண்மை
சிலம்பரசனின் திடீர் வருகையை எதிர் பார்க்காத போட்டியாளர்கள் பலர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது போல, பாலாவும் தன்னுடைய ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் வெளிகாட்டியிருந்தார். தன்னுடைய சட்டையை கழற்றி அவர் வீசி சந்தோசத்தை வெளிக்காட்டி வேற லெவல் பன் பண்ணியிருந்தார். இந்த நிலையில் சிலம்பரசனுடன் தான் குழந்தையாக அவர் நடித்த திரைப்படத்தில் நடித்திருப்பதாக பாலா அணைவர் முன்னாடியும் உண்மையை உடைத்திருக்கிறார். இதை சிலம்பரசன் மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. சிலம்பரசன் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற வல்லவன் திரை படத்தில் முதல் பாடலில் ஒரு குழந்தையாக பாலாஜி முருகதாஸ் டான்ஸ் ஆடி இருக்கிறாராம். சிம்புவுக்கு பின்னாடி நின்று அந்த டான்ஸ் ஆடும்போது சிம்புவின் தீவிரமான ரசிகர் ஆக மாறி விட்டதாக கூறியிருந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சிம்பு என்னோட படத்துல குழந்தையா நடிச்சேன் என்று சொல்லி என்னோட வயசை அதிகம் என்று நினைக்க வைத்திராதேபா என்று பாலாஜியை ஆப் செய்து இருக்கிறார்.