பாரதிகண்ணம்மாவில் வெண்பா எடுக்கப்போகும் முடிவு...ஏன் இந்த திடீர் மாற்றம்...குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: பாரதிகண்ணம்மாவில் தற்போது இயக்குனர் வெளியிட்டிருக்கும் புது ட்விஸ்ட் ரசிகர்களுக்கு குழப்பத்தை கொடுத்துள்ளது.
அடுத்தகட்டமாக வெண்பாவை என்ன செய்யலாம் என்று கேள்வி எழுப்பிய இயக்குனருக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் 5:கோபமா..எனக்கா..ராஜு மேலேயா.. இது மட்டும்தான் காரணம்.. பாவனியின் புது விளக்கம்

இந்த வார ப்ரமோ
பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த வார ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் கண்ணம்மாவின் மீது பாரதிக்கு ஏற்பட்டிருக்கும்
நல்லெண்ணங்கள் சீரியல் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் வெளியிட்ட ட்விஸ்ட்
சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. வழக்கமாக பாரதிகண்ணம்மா சீரியலில் விறுவிறுப்பாக இருக்கவண்டும் என்பதற்காக பல சீன்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று நெட்டிசன்கள் மத்தியில் ஒரு குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வாரம் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும் நேரத்தில் அடுத்த ஒரு ட்விஸ்ட் ரசிகர்களுக்கு இருக்கிறது என்று அந்த சீரியலின் இயக்குநர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வெண்பாவின் வில்லத்தனம்
இந்த சீரியலின் இயக்குனர் பென்னட் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெண்பாவை அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரு வீடியோவை ஸ்டோரியாக போஸ்ட் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பல்வேறு விதமாக வெளியிட்டு வருகின்றனர். வெண்பா பாரதியை எப்படியாவது தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு பிளான் ஆக செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பாரதியின் முதல் காதலியை கொலை செய்தவர், இரண்டாவது முறையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து பிரித்து விட்டார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது
தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதால் மீண்டும் கோபத்தில் இருக்கும் வெண்பா தன்னை பாரதி அடியோடு வெறுத்து விட்டதை தெரிந்து கொண்டு மனநிலை சரியில்லாதவர் போல நடந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது மின்விசிறியில் கயிற்றை மாட்டிக் கொண்டு கீழே ஒரு ஸ்டூலில் உட்கார்ந்த படி தூக்கு போட்டு கொல்லப்போவதாக சைகை மொழியில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஷேர் செய்த பென்னட், வெண்பாவை என்ன செய்யலாம் என்று கேள்வியை கேட்டிருக்கிறார். இதை பார்க்கும்போது அடுத்ததாக வெண்பா தற்கொலை செய்துகொள்ள போகிறாரா? ? அல்லது பாரதியிடம் நாடகமாட போகிறாரா என்று ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.